கேசிஆர் -ஸ்டாலின் சந்திப்பை அன்று எதிர்த்த திருமாவளவன்.. இன்று வரவேற்று பேட்டி!
சந்திரசேகரராவ், ஸ்டாலலின் சந்திப்பை வரவேற்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: "நாட்டின் நலன் கருதி சந்திரசேகர ராவ் - ஸ்டாலின் சந்திப்பு இருக்கும் என்ற வகையில் அதனை நான் வரவேற்கிறேன்" என்று திருமாவளவன் கருத்து கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சில தினங்களுக்கு முன்பு சந்திக்க முயன்றார்.
ஆனால் இந்த சந்திப்பு எதிர்பாராத சில காரணங்களால் நடைபெறவில்லை. இதற்கு இரு தரப்பிலும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களும் வெளியாகின.

ராகுல் பிரதமர்
இது சம்பந்தமாக அப்போது கருத்து கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "சந்திர சேகர ராவுடனான அந்த சந்திப்பை திமுக தவிர்த்துள்ளது. இந்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். பாஜக ஆட்சிக்கு வராமல் இருக்க திமுகவின் நிலைப்பாடு உறுதியாக இருக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்து, ராகுல் காந்தி பிரதமராவார் என்று முதலில் அறிவித்தது திமுக"தான் என்று சொல்லி இருந்தார்.

வரவேற்பு
இந்த நிலையில் இன்று கேசிஆர்-ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது. அன்று இவர்களின் சந்திப்பு தவிர்க்கப்பட்டதாக கூறி அதனை வரவேற்ற திருமாவளவன், இன்று சந்திப்பு நடந்ததையும் வரவேற்பதாக கூறியுள்ளார்.

உறுதியாக சொல்ல முடியாது
இதுபற்றி கூறிய திருமாவளவன் "பாஜகவோடு இணைவதைவிட காங்கிரசுடன் இணைந்து ஆட்சி நிர்வாகத்தில் பங்கேற்கலாம் என்று கூட சந்திரசேகரராவ் நினைத்திருக்கலாம். அதை அவர் வெளிப்படையாக சொன்னால்தான் தெரியும். இப்போதைக்கு அவர் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறார் என்பதை நான் உறுதியாக சொல்லமுடியாது.

தீவிர கூட்டணி
ஒருவேளை சந்திரசேகர ராவ் - ஸ்டாலின் சந்திப்பு நாட்டின் நலன் கருதி இருக்கும் என்ற வகையில் அதனை வரவேற்கிறேன். சந்திரசேகர ராவின் சந்திப்புகள் அனைத்தும், காங்கிரசுடன் தீவிர கூட்டணியில் உள்ள கட்சிகளுடனே நடைபெற்று வருகிறது" என்று கருத்து கூறியுள்ளார்.

நாட்டின் நலன்
ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பில், என்ன பேசினார்கள் என்பதை கேசிஆரும் சொல்லவில்லை, ஸ்டாலினும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் நாட்டின் நலன்கருதிதான் பேசியிருப்பார்கள் என்று திருமா சொல்வது திமுக மீதான அதீத நம்பிக்கையின் வெளிப்பாடா என்பது தெரியவில்லை.

ஏன் பங்கேற்கவில்லை?
அதேபோல, காங்கிரசுடன் தீவிர கூட்டணியில் உள்ள கட்சிகளுடனே இந்த சந்திப்பு நடப்பதாக திருமா சொன்னாலும், கூட்டணியை சார்ந்தவர்கள் யாருமே இந்த சந்திப்பில் பங்கேற்காததும் ஏன் என்றும் தெரியவில்லை!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications