Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிவீரா.. உதயநிதியை பாராட்டிய திருமாவளவன்.. நெகிழ்ந்து நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இறுதியில் சமூக நீதியே வெல்லும் என உரத்துப் பேசும் திரை இலக்கியமே மாமன்னன்" என்று தெரிவித்து உதயநிதிஸ் ஸ்டாலினை பாராட்டியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாமன்னன் படமே தன் கடைசி படம் என அறிவித்தார். இதனால், இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் வெகுவாக அதிகரித்தன.

Thirumavalavan praises udhayanidhi stalin about Maamannan movie

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாமன்னன் திரைப்படம் வெளியானது. இபபடத்திற்கு இருந்த எதிர்பார்ப்பின் காரணமாக முதல் நாள் முதலே பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலைக் குவித்து வருகிறது. மாமன்னன் படத்திற்கு சில நெகட்டிவ் விமர்சனங்களைத் தாண்டி பொதுவான ரசிகர்களின் ஆதரவினால் மாமன்னன் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மாமன்னன் திரைப்படம் பேசும் அரசியல் சமூக தளங்களில் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. அரசியல் பிரமுகர்கள் பலரும் மாமன்னன் திரைப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி மாமன்னன் திரைப்படம் பார்த்த பின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Thirumavalavan praises udhayanidhi stalin about Maamannan movie

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூக நீதிக்கும் சாதி ஆதிக்க வெறிக்கும் இடையிலான கரடுமுரடான முரண்களை விவரிக்கும் கலைச் சித்திரமே இயக்குநர் மாரி செல்வராஜின் 'மாமன்னன்'. சாதி ஒரு கருத்தியலாக மட்டுமின்றி; அது ஒரு கலாச்சாரமாகவும் வலுவடைந்து கெட்டித் தட்டிக் இறுகிக் கிடக்கிறது. அதனைத் தகர்ப்பது என்பதைவிட; தளர்வுறச் செய்வதே ஒரு பெரும் போராகும். அப்போரினை குருதிக் களத்தில் விவரிப்பதே மாமன்னன்.

இறுதியில் சமூகநீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரைஇலக்கியமே மாமன்னன். சபையின் நாயகமாக சமூகநீதியை அமர வைக்கும் அதிவீரனின் மாபெரும் வெற்றியே மாமன்னன். அன்பு இளவல்கள் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். பாராட்டுகள்" எனத் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan praises udhayanidhi stalin about Maamannan movie

இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, படத்தில் பேசப்பட்டுள்ள சமூக நீதி அரசியலை மேற்கோள்காட்டி உள்ளன்போடு வாழ்த்திய வி.சி.க தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு நம் படக்குழு சார்பில் என் அன்பும், நன்றியும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+