அதிமுக - பாஜக கூட்டணிக்கு யார் தலைமை.. எடப்பாடி பழனிசாமியா அல்லது அமித்ஷாவா? திருமாவளவன் கேள்வி!
திருவள்ளூர்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான உருவாக்கப்பட்டுள்ள அதிமுக - பாஜக கூட்டணிக்கு யார் தலைமை என்பதை எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தி இருக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணியை வழிநடத்துவது எடப்பாடி பழனிசாமியா அல்லது அமித்ஷாவா என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார் என்று கூறி இருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட அமித்ஷா கூறாமல் தவிர்த்திருப்பது அக்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுக vs பாஜக
அதேபோல் மீண்டும் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறி இருக்கிறார். இதனால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வென்றால், ஆட்சி அதிகாரத்தில் பாஜக பங்கு வகிக்கும், அமைச்சரவையில் இடம்பெறும் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால் அதிமுக தரப்பில் இது வெறும் தேர்தல் கூட்டணி என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது.
திருமாவளவன் பேட்டி
இந்த விவகாரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக - பாஜக விரும்பி கூட்டணி அமைத்திருப்பதாக அமித்ஷா மட்டுமே சொல்லி கொண்டிருக்கிறார். இந்த கூட்டணியை என்டிஏ கூட்டணி என்றும், கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறோம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டும்.
யார் தலைமை?
அதிமுக தலைமையில் கூட்டணியா? அல்லது பாஜக தலைமையில் கூட்டணியா? என்ற கேள்வியும் எழுகிறது. அறிவிக்க வேண்டியவர் யார்? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உருவாகியுள்ள இந்த கூட்டணியை தலைமை வகித்து வழிநடத்துவது எடப்பாடி பழனிசாமியா? அல்லது அமித்ஷாவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
அதிமுகவுக்கு அழுத்தம்
தொடர்ந்து, ஒரு ஆண்டுக்கு முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துவிட்டார்கள். என்ன அவசரம், என்ன அழுத்தம் என்று தெரியவில்லை. இதற்கான காரணத்தை அதிமுக தான் தெளிவுபடுத்த வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துவிட்ட பின், அந்த கூட்டணிக்கு விசிக செல்லுமா என்ற கேள்வியே தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் விசிக?
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், விசிக தலைவர் திருமாவளவன் அதிமுக மீதான அக்கறையை பல்வேறு தருணங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனை சந்தித்து திருமாவளவன் பேசி இருந்தார். அதேபோல் பாஜக உடன் கூட்டணி அமைத்திருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாது என்றும் திருமாவளவன் தெளிவுப்படுத்தி உள்ளார்.
-
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக்










Click it and Unblock the Notifications