“அவ்வளவு நேர்மையானவர்களா.. மோடியும், அமித்ஷாவும்?” திருமாவளவன் சரமாரி கேள்வி!
சென்னை: "அரசு அதிகாரிகளை, சட்டம் சொல்வதை போல வேலை செய்ய விடும் அளவுக்கு, பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேர்மையானவர்களா?" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் பங்கேற்ற பேசிய திருமாவளவன் மேற்குறிப்பிட்ட விமர்சனங்களை அடுக்கியிருக்கிறார்.

மேலும் அவர் பேசியதாவது, "இப்போது மோடிக்கும். அமித்ஷாவுக்கும் வேண்டியவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை பீடத்தில் இருக்கிறார் என்றால்.. அவங்க இன்ஃப்ளுயன்ஸ் பண்ணாம இருப்பாங்களா? மோடியும், அமித்ஷாவும், பாஜக தலைவர்களும், சங்பரிவார் தலைவர்களும் அவ்வளவு நேர்மையானவர்களா?
'நீங்க அரசு அதிகாரிகள், நாங்க அரசியல்வாதிகள். நமக்கிடையில் அந்த அளவு மட்டும் உறவு இருந்தா போதும். என்ன சட்டம் சொல்லுதோ அப்படியே செயல்படுங்க' என்று சொல்லக்கூடிய அளவுக்கு நேர்மை, திறம் வாய்ந்த அரசியல் தலைவர்களா அவர்கள்? இன்ஃப்ளுயன்ஸ் பண்ணவே மாட்டார்களா?
தோழர்களே தேர்தல் ஆணையமும், பாஜகவும் இன்றைக்கு ஒரே நிறுவனம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மாறி இருக்கிறது. தேர்தல் ஆணையமும் மத்திய அரசின் ஆட்சியாளர்களும் ஒரே நோக்கத்திற்காக செயல்படக்கூடியவர்களாக வெளிப்படையாக இயங்குகிறார்கள். ஆகவே இது வெறும் வாக்காளர் பட்டியலை சீர் செய்கிற நடவடிக்கை அல்ல. வாக்காளர்களை அதிகமாக சேர்ப்பதற்குரிய முயற்சி அல்ல. போலி வாக்காளர்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சி அல்ல. அந்நிய தேசங்களிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்களை வாக்காளர்களாக மாறுவதை தடுக்கிற முயற்சி அல்ல.
பாஜகவுக்கு ஒரு தேசிய மக்கள் பெயரேடு தேவைப்படுகிறது. அவர்கள் விரும்புகிற இந்தியாவை கட்டமைப்பதற்கு, சிஐஏ சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் கண்ட கனவை சிதைத்துவிட்டு, மனுவின் கனவை நனவாக்குவது அவர்களின் இறுதி லட்சியம். கோல்வாக்கரின் கனவை நனவாக்குவது அவர்களின் இறுதி லட்சியம். அதை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களுக்கு தேசிய குடிமக்கள் பேரேடு தேவைப்படுகிறது.
மாற்று கருத்துள்ளவர்களை பலவீனப்படுத்த வேண்டும். எதிர்கருத்து பேசுகிறவர்களை வீழ்த்த வேண்டும். எழுந்திருக்க விடாமல் அவர்களின் இடுப்பெலும்பை முறிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் வலிமை பெற்று விடாமல் தடுக்க வேண்டும்.
இடதுசாரி அரசியலோ, திராவிட அரசியலோ, அம்பேத்கரிய அரசியலோ, பெரியாரிய அரசியலோ, தேசியவாத மொழிவழி தேசியவாத அரசியலோ, தலைதூக்கி விடக்கூடாது. இவையெல்லாம் அவர்கள் விரும்புகிற ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்கிற கனவை நடவாக்குவதற்கு தடைக்கற்களாக இருக்கின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள், நம்புகிறார்கள். ஆகவே பன்மைத்துவத்தை, மதச்சார்பின்மையை, அரசமைப்பு சட்டத்தை சிதைப்பது. தெளிவாக சொல்ல வேண்டுமானால் அம்பேத்கரின் கனவை சிதறடிப்பது. எனவேதான் நாம் பாஜகவையும், சங்பரிவார்களை எதிர்க்கிறோம்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் நாங்கள் விடுக்கிற வேண்டுகோள், எஸ்ஐஆரை நிறுத்துங்கள், கைவிடுங்கள். வழக்கமான சம்மரி ரிவிஷன் என்கிற முறையை நடைமுறைப்படுத்துங்கள். பாஜாகவோடு கூட்டு சேர்ந்து செய்கிற சதி முயற்சியை முற்றாக கைவிடுங்கள் என்பதே விடுதலை சிறுத்தைகளின் வேண்டுகோள். மக்களை திரட்டி போராடி தடுப்பதற்குரிய கால அவகாசம் இல்லை, அதனால் நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications