பெரியாரை விஜய் ஏற்றுக்கொண்டாரா.. இவ்வளவு அமைதியா இருக்காரு.. திருமாவளவன் கேள்வி
சென்னை: முருகன் மாநாட்டில் பெரியாரை கொச்சைப்படுத்தி இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் வீடியோ வெளியிட்டுள்ள போதும், தவெக தலைவர் விஜய் அமைதி காப்பது ஏன் என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் விஜய் உண்மையாகவே பெரியாரை உள்வாங்கி இருக்கிறாரா, ஏற்றுக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா ஆகியோர இந்து முன்னணி மற்றும் பாஜக கொச்சையாக விமர்சித்து வீடியோ ஒளிபரப்பியது. அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் முன்னிலையிலேயே இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது தமிழக அரசியலில் விவாதமாக மாறியது.

முருகன் மாநாடு
அண்ணாவின் பெயரை அடமானம் வைத்துவிட்டதாக அதிமுக மீது முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்தை வைத்துள்ளார். அதேபோல் ஆர்பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்தாலும், எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருக்கிறார். இன்னும் அவர் பெயரில் ஒரு அறிக்கை கூட வெளியாகவில்லை.
எடப்பாடி பழனிசாமி அமைதி
அதேபோல் பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்று கட்சி தொடங்கி நடத்தி வரும் தமிழக வெற்றிக் கழகமும் இதுவரை அமைதி காத்து வருகிறது. தவெக தலைவர் விஜய் பல்வேறு விவகாரங்களிலும் அறிக்கை வெளியிட்டு வந்தாலும், பெரியார் மற்றும் அண்ணாவை கொச்சப்படுத்திய விவகாரத்தில் இதுவரை அமைதியாகவே இருக்கிறார்.
திருமாவளவன் பேட்டி
இதனால் தவெகவை பாஜகவின் பீ டீம் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். அதேபோல் அதிமுக தொடர்பான விவகாரங்களிலும் விஜய் நீண்ட காலமாக அமைதியாக இருக்கிறார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் திட்டம்.
பாஜகவின் திட்டம்
இதனை அதிமுகவினர் எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள். நாங்கள் 2 சீட்டாக அல்லது ஒரு சீட்டாக குறைகிறோம். அது எங்களுக்கு பிரச்சனையில்லை. ஏனென்றால் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்ததில்லை. முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதன் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று அதிமுக சொல்வது உடன்பாடான கருத்து இல்லை.
பாஜகவின் பி டீம்
பெரியார், அண்ணாவை கொச்சைப்படுத்த கூடிய அமைப்புகளோடு அதிமுக பயணிப்பது தற்கொலைக்கு சமம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, வலதுசாரி அரசியலுக்கு துணை போகும் வகையில் செயல்படும் போது பாஜகவின் பி டீம் என்று விமர்சனங்கள் வரும். பாஜகவின் செயல் திட்டங்கள் என்ன.. திராவிட கட்சிகளை ஒழிப்பது, கழகங்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவது ஆகியவைதான்.
கமல்ஹாசனின் அரசியல்
கமல்ஹாசன் தொடக்கத்தில் பேசும் அரசியலுக்கும், தற்போது பேசும் அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது. அவர் சமூகநீதி அரசியலுக்கு ஆபத்து என்பதை உணர்ந்திருக்கலாம். அதனால் முரண்பாடு இருந்தாலும் கூட முரண்பாடான கட்சிகளுடன் பயணிக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கலாம். பாஜக எதிர்ப்பு முக்கியமானது. நடுநிலை சரி வராது என்பதை உணர்ந்து மாற்றம் வந்திருக்கலாம் என்று கூறினார்.
விஜய் மீது அட்டாக்
தொடர்ந்து பெரியார் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் அமைதி காப்பது தொடர்பான கேள்விக்கு, இந்த நேரத்தில் விஜய் பேசியிருக்க வேண்டும். பெரியாரை விமர்சனம் செய்த பிறகும் அமைதியாக இருப்பது, அவர் உண்மையாகவே பெரியாரை உள்வாங்கி இருக்கிறாரா, ஏற்றுக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் கூறி இருக்கிறார். மேலும் பெரியார் தொடர்பான சீமானின் விவகாரத்திலும் விஜய் அமைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன தவெக.. சில நிமிடங்களில் வெளியான கரூர் ட்ரோன் காட்சி.. வசமாக மாட்டிய விஜய் -
காலம் கடந்துவிட்டது விஜய்! இந்த சமாளிப்புகள் இனி உதவாது! இப்தாருக்கு காத்திருந்தது ஏன்? -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
வசமாக சிக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவின் ஸ்கெட்ச்! தவெகவுக்கு இப்படியா நடக்கனும்! -
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
சிபிஐயிடம் வசமாக சிக்கிய விஜய்? பிரசார வாகனம் 20 மீட்டர் தள்ளிப்போனது ஏன்? கரூர் நெரிசலில் ட்விஸ்ட் -
மன்னிப்பு கோரிய ஆதவ் அர்ஜுனா.. மகிழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் டீம்.. உச்சத்தில் தவெக கோஷ்டி பூசல்! -
சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி! -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே -
திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது -
சிம்பு விஜய்யை காலி பண்ணி இருப்பாரு.. ரஜினி ஒரு வார்த்தை சொன்னால் வேற மாதிரி ஆகிடும்..! பிரபலம் ஆதங்கம் -
பொண்டாட்டி இருக்க, திரிஷா தேவையா? தெலுங்கு ரவி தேஜா படத்தின் வசனத்தில் உள்குத்து! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications