'TN 07 CM 2031' காரில் கெத்தாக பயணித்த திருமா.. அண்ணே அந்த கார் நம்பர் ஃபேக்? ஹோண்டா டியோ நம்பராமே!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக 'டிஎன் 07 சிஎம் 2031' என்ற பதிவெண் கொண்ட காரில் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த காரின் எண் போலியானது என்றும், இரு சக்கர வாகன நம்பர் பிளேட்டை வைத்த அந்த காரில் திருமாவளவன் பயணித்தாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் அந்த காரின் உண்மையான உரிமையாளர் யார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 'TN 07 CM 2031' என்ற பதிவெண் கொண்ட காரில் அவர் பயணித்தார். ஜாக்குவார் போன்ற காரில் அவர் பயணித்து நிலையில் டெஸ்லா கார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர் .
உண்மையில் டெஸ்லா கார் மின்சார கார் என்ற நிலையில் அதற்கு ஒயிட் போர்டு நம்பர் பிளேட் எப்படி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்த நிலையில் அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என தெரிய வந்தது. இந்த நிலையில் பல ஊடகங்களில் உண்மையில் அதே பதிவெண்கொண்ட காரில் தான் திருமாவளவன் பயணித்ததாக வீடியோ பகிரப்பட்டு வந்தது. தற்போது அதுவும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

மத்திய அரசின் பாரிவாகன் இணையதளத்தில் அந்த குறிப்பிட்ட எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அது ஹோண்டா டியோ என்ற இருசக்கர வாகனத்தின் பதிவெண் என்பதும் ஹெல்மெட் அணியாமல் ஃபைன் வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் போலியான பதிவில் கொண்ட காரில் திருமாவளவன் பயணித்தார் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த கார் திருமாவளவனுக்கு சொந்தமானதா? அல்லது போலி பதிவின் கொண்ட காரில் திருமாவளவனை அவரது கட்சியினர் பயணிக்க வைத்தார்களா என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications
