சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எகிறி அடிக்கும் திருமாவளவன்.. "நீலமும் காவியும்".. தமிழகத்துக்கு குறி..முதல்வரே உஷார்.. பரபர பேட்டி

பாஜகவை சரமாரி விமர்சித்து கடலூரில் திருமாவளவன் பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சமூக நீதி பெயரால் ஒரு கண்காணிப்பு குழு உருவாக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:

 திமுகவில் முட்டி மோதும் 3 வி.ஐ.பி.க்கள்! யாருக்கு சிம்மாசனம்? பரபரக்கும் கோவை மேயர் ரேஸ்! திமுகவில் முட்டி மோதும் 3 வி.ஐ.பி.க்கள்! யாருக்கு சிம்மாசனம்? பரபரக்கும் கோவை மேயர் ரேஸ்!

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர்கள் ஆங்காங்கே பிரச்சாரத்தில் ஈடுபட கூடிய நிலையை எட்டியிருக்கிறது. கடலூர் புதிதாக மாநகராட்சியாக பரிணாமம் பெற்றிருக்கிறது.

 திருமாவளவன்

திருமாவளவன்

இந்த மாநகராட்சியில், திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று இடங்களில் போட்டியிடுகிறது. 2 தனி வார்டிலும், ஒரு பொது வார்டிலும் போட்டியிடும் வாய்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் பெற்றுள்ளது. தமிழகமெங்கும் நடைபெறும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணி தேர்தலுக்கு முன்பே சிதறி விட்டது...

 பாமக, பாஜக

பாமக, பாஜக

பாஜக ஒருபுறம், பாமக ஒருபுறம், அதிமுக ஒரு புறம் என்று அவர்கள் தனித்தனியே தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் திமுக கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் எவ்வாறு சந்தித்ததோ அதைப்போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கட்டுக்கோப்பாக இந்த கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. 21 மாநகராட்சிகளில் திமுக கூட்டணி கைப்பற்றும். அதேபோல நகராட்சிகளையும், பேரூராட்சிகளையும் கைப்பற்றக் கூடிய அளவுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பும் செல்வாக்கும் இந்த கூட்டணிக்கு உள்ளது.

 இஸ்லாமிய பெண்கள்

இஸ்லாமிய பெண்கள்

ஹிஜாப் உடை அணியும் சுதந்திரம் இஸ்லாமிய சமூகத்தில் பெண்களுக்கு உண்டு. இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உடை அணியும் சுதந்திரம் மற்றும் மத நம்பிக்கை தொடர்பான சுதந்திரம் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உண்டென்பதை நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது.

முரண்கள்

முரண்கள்

ஆனால் சங் பரிவார்க் கும்பல் திட்டமிட்டு மாணவர்களிடையே இத்தகைய முரண்களை உருவாக்குகின்றனர். அதுதான் கர்நாடகாவில் நடந்திருக்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்களிடையே ஒருபுறம் காவி துண்டு அணிவதும், இன்னொருபுறம் அம்பேத்கர்வாதிகள் நீல துண்டு, அனைவரும் இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப் அணிந்து செல்வதும் மாணவ சமூகத்தை பிளவுபடுத்துகிற பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்வது நாட்டை நாசப்படுத்தும் முயற்சியாகும்.

 சங்பாரிவார்

சங்பாரிவார்

இதனை ஜனநாயக சக்திகள் அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்து வன்மையாக கண்டிக்க வேண்டும்.. இதை தடுத்து நிறுத்த வேண்டும். என்று விசிக வேண்டுகோள் விடுக்கிறது. தமிழகத்தில் கர்நாடகாவில் இருந்து ஏராளமான சங்பரிவார் கும்பலை சேர்ந்தவர்கள் உதவியிருக்கின்றனர் கிராமம் கிராமமாக சென்று மதவெறியை தூண்டுகின்றனர். இதை கண்காணிப்பதற்கும் தடுப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இதற்கென எல்லா கிராமங்களிலும் சமுகநீதி படையை அரசே உருவாக்க வேண்டும்.

 கண்காணிப்பு குழு

கண்காணிப்பு குழு

சமூக நீதி பெயரால் ஒரு கண்காணிப்பு குழு உருவாக்க வேண்டும் என்று விசிக வேண்டுகோள் வைக்கிறது.. அவர்கள் தமிழ்நாட்டை குறி வைத்து கர்நாடகாவை மையமாக கொண்டு செயல்பட தொடங்கி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது தமிழக அரசு மற்றும் முதல்வர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

 உறவு

உறவு

ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவு கூட்டாட்சி கோட்பாட்டின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது அரசியல் அமைப்புச் சட்டம் காட்டுகிற வழிமுறையாகும்.. அதை வலியுறுத்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி புதுச்சேரியில் கூட்டாட்சி கோட்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று ஒருங்கிணைத்து உள்ளோம்" என்றார்.

English summary
Thirumavalavan says about Hijab issue and slams BJP Government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X