கமல் மேல "அந்த" நிழல் இருக்கே.. அது தெரியுமா தெரியாதா.. நெற்றியில் அடித்தாற் போல கேட்கும் திருமா!

கமல்ஹாசன் பாஜகவின் பி டீம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் பாஜகவின் பி டீம்.. அவர் வலதுசாரிகளின் நிழலாக இருக்கிறார் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து கூறியுள்ளார்.

மநீம தலைவர் கமலை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே ஒருவித குழப்ப மனநிலைமையை மக்களுக்கு ஏற்படுத்தி கொண்டே இருப்பவர்..

அதிமுக சாடும் கமல், ஏன் திமுகவை விமர்சிப்பதில்லை? மாநில அரசை குற்றஞ்சாட்டும் கமல், எதற்காக மத்திய அரசை குற்றஞ்சாட்டுவதில்லை? என்பன போன்ற பல சந்தேகங்கள் அடிக்கடி எழுவது இயல்பான ஒன்றுதான்.

திமுக

திமுக

ஆனால், இதுபோன்ற விமர்சனங்களை எல்லாம் கமல் பொருட்படுத்துவதே இல்லை.. ஒருமுறை செய்தியாளர்கள் கமலிடம் இதை நேரடியாகவே கேட்டுவிட்டனர்.. "நீங்க பாஜகவின் பி டீமா? உங்களை கார்ப்பரேட்டுகள்தான் டைரக்ட் செய்கின்றவாமே? என்று கேட்டதற்கு, கமல் கொஞ்சம் கூட டென்ஷன் ஆகவில்லை.. பதட்டமும் ஆகவில்லை.. "நான் காந்தியாரின் பி டீம். பிக்பாஸுக்கு மட்டும்தான் என்னை டைரக்ட் பண்ண முடியும்.." என்றார்.

கமல்

கமல்

அதற்கு பிறகு பலமுறை கமல்மீது பாஜகவின் பி டீம் என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும் அதையெல்லாம் பெரிதாக கமல் எடுத்து கொள்ளவில்லை.. ஆனால், 2 நாளைக்கு முன்புதான் இந்த பி டீம் விஷயம் பற்றி மறுபடியும் கமல் பதிலடி தந்திருந்தார். அதில், "இப்படி ஒரு விஷமப் பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்களே திமுகவினர் தான்... இவர்களுக்கு நான் ஒத்துப் போகவில்லை என்பதால் தான் இப்படி எல்லாம் சொல்கிறார்கள்.. வாழ்நாள் முழுக்க பகுத்தறிவாதியாக இருக்கும் என் மீது காவி சாயம் பூசுகிறார்கள்.

 பி-டீம்

பி-டீம்

இப்படி பேசுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். காங்கிரஸை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்பது தான் பாஜகவின் திட்டம். அதாவது காங்கிரஸுக்கு எம்எல்ஏ, எம்பியே இருக்கக் கூடாது என்று அவர்களின் இருப்பையே இல்லாமல் செய்யும் திமுக தான் உண்மையான பி டீம். இது காங்கிரஸ் கட்சிக்கு புரிய வேண்டும்" என்றார். கமலின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இதற்கு காரணம், திமுகவை நேரடியாக இதற்கு முன்பு கமல் விமர்சித்தது இல்லை.. மற்றொன்று, இந்த விஷயத்திலும் பாஜகவை முன்வைத்து எந்த கருத்தையும் சொல்லவும் இல்லை.

திருமாவளவன்

திருமாவளவன்


இப்படிப்பட்ட சூழலில்தான் விசிக தலைவர் திருமாவளவன், கமல் குறித்த தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.. ஒரு தனியார் சேனலுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில் சொல்லும்போது, "எந்த கட்சியுமே சுயம்புவாக இருக்க வேண்டும்.. மய்யம் என்றால் இடதும் இல்லை, வலதும் இல்லை, மய்யமாக நிற்போம் என்றுதான் அர்த்தம்..இன்றைக்கு பாஜகவின் கருத்தியல் மிக ஆபத்தானது.. இதை கமல் போன்றவர்கள் எல்லாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.. கமலுக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது.. பொதுவாக பேசக்கூடியவர்..

 விமர்சனம்

விமர்சனம்

கமலை பொறுத்தவரை நாணயமாக பேசக்கூடியவர்.. வலதுசாரியின் நிழலாக இருப்பதாக தோன்றுகிறது.. அப்படி ஒரு தோற்றம் ஏற்படுகிறது.. அவரை சுற்றி இருப்பவர்களின் கடந்த கால அரசியலும் அவர்மீது அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.. இது கமலுக்கு தெரியுமா? தெரியாதா என்று தெரியவில்லை.. ஆனால், வலதுசாரிகளின் நிழலாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+