அவசர அவசரமாக.. திருமாவளவன் மேடையில் ஓடிவந்து சொன்னாரே.. இப்படி பாஜகவில் செய்வீங்களா: டாக்டர் ஷர்மிளா
திருமாவளவன் சனாதனம் குறித்து பேசிவருவது ஏன் என டாக்டர் ஷர்மிளா விளக்கி உள்ளார்
சென்னை: மேடையில் ஏறி பேசுவதற்கும், தங்கள் கருத்தை சொல்வதற்கும் பெண்களுக்கு முழு சுதந்திரத்தை விசிக தந்துள்ளது.. ஆனால், பாஜகவில் இப்படி நடக்கிறதா? என்று திமுக ஆதரவாளர் டாக்டர் ஷர்மிளா கேள்வி எழுப்பி உள்ளார்.
திருமாவளவன் மணி விழாவுக்கான தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அக்கட்சி தலைவர் திருமாவளவன் அதில், கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் நற்சோனை, விசிகவில் நடக்கும் ஒருசில விவரங்களை பகிரங்கமாக மேடையிலேயே போட்டுடைத்தார்.

மைக் பிடித்து
மாவட்டங்களில் திருமாவளவன் பெயரை சொல்லி நன்கொடைகள் வாங்கப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகிகள், பெண்களை மிக கேவலமாக திட்டுவதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே சனாதனம் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை இருப்பதாகவும் அவர் அப்போது குற்றஞ்சாட்டினார்.. நற்சோலை இப்படி பேசிக்கொண்டிருந்தபோது மேடைக்கு வந்த ஆண் நிர்வாகி ஒருவர், மைக்கை ஆப் செய்து விட்டார். அப்போது நற்சோனைக்கு ஆதரவாக அரங்கில் உட்கார்ந்திருந்த மகளிர் பலர் எழுந்து நின்று குரல் கொடுத்ததால் சலசலப்பு நிலவியது...

திருமாவளவன்
உடனே திருமாவளவன் எழுந்து வந்து, தனக்கு ஏற்பட்ட கசப்பை இங்கே நற்சோனை பேசியதை வரவேற்கிறேன். முரண்பாடுகள் விவாரத்திற்கு வரும்போது அதற்கு தீர்வு காண முடியும்" என்று சொல்லி நற்சோனை பேச அனுமதி தந்திருந்தார்.. எனினும் இந்த விஷயம் சர்ச்சையாக வெடித்தது.. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து சனாதனத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், சனாதனத்தை வெரறுப்போம் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று திருமாவளவன் ஒவ்வொரு மேடைகளிலும் முழங்கி வரும் நிலையில், இப்போது விசிக கட்சிக்குள்ளேயே சனாதனம் என்று பெண் நிர்வாகி கூறியிருந்தது விமர்சனமாகவும் வெடித்தது..

குரான் பைபிள்
இதுகுறித்து, அக்கட்சியின் ஆதரவாளரும், அரசியல் விமர்சகருமான டாக்டர் ஷர்மிளாவிடம் நாம் கேட்டோம். நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஷர்மிளா தந்த பதில்தான் இது: "மனுஸ்மிரிதி இப்போது எங்குள்ளது? மனுதர்மம் எங்கே இருக்கிறது? எல்லாமே இப்போது அரசியலமைப்பு சட்டப்படி தானே நடக்கிறது? திருமாவளவன் தன் அரசியல் லாபத்துக்காக இந்த சனாதனத்தை கையில் எடுக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள்.. ஆனால், குரானோ, பைபிளோ, பகவத்கீதையோ, வீடுகளில் இருப்பதுபோல், மனுஷ்மிருதியும் ஒவ்வொரு வீடுகளில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை..

திருமா மைக்
காரணம், அந்த மனுஷ்மிருதியில் உள்ள பிற்போக்கான கருத்தியலை, காலம் காலங்கமாக, மண்டைக்குள் புகுத்திவிட்டார்கள். அது இப்போதும், தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறை தலைமுறையாக வெளிவந்து கொண்டிருக்கிறது. நம்மையே அறியாமல் அதை கடைப்பிடித்து கொண்டுமிருக்கிறோம்.. அந்தவகையில்தான், சனாதன போக்கு என்பது விசிகவிலும் உள்ளது.. நற்சோனை இதை பதிவுசெய்யும்போது, மேடையில் மைக் ஆப் செய்யப்படுகிறது.. உடனே திருமாவளவன் எழுந்து வந்து, அதே மைக்கில் பேசுகிறார்,

கே டி ராகவன்
"அவர் கஷ்டத்தை அவர் சொல்கிறார், அவர் சொல்வதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது.. அவர் பேசுவதை ஏன் தடுக்கிறீர்கள்? இப்படி பேசினால்தான் தீர்வு கிடைக்கும்?" என்று சொல்லி அதே மேடையில் பதிவு செய்கிறார்.. இது ஆரோக்கியமான போக்காகவே நான் பார்க்கிறேன்.. மேடையில் ஏறி பேசுவதற்கு, அந்த பெண்ணுக்கு சுதந்திரம் இருக்கிறது.. ஆனால், இதே சுதந்திரம் பாஜகவில் இருக்கிறதா? புகார் சொல்லும் பெண்ணிடம் மைக்கை தந்து பாஜகவில் பேசவிடுவார்களா?

ஆக்ஷன்
லட்சுமண கோட்டை தாண்டும் கட்சிக்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அதிரடி ஆக்ஷன் பாயும் என்று அண்ணாமலை எச்சரிக்கிறார். ஏன் லட்சுமணன் கோடு சீதைகளுக்கு மட்டும்தானா? ராமர்களுக்கு கிடையாதா? திருச்சி சூர்யா அவ்வளவு கேவலமாக பேசினாரா? அவர் லட்சுமண கோட்டை கடக்கவில்லையா? எச்.ராஜா மேடைகளில் அவ்வளவு கேவலமாக பேசுகிறாரே, அவர் லட்சுமணன் கோட்டை கடக்கவில்லையா? அதென்ன லட்சுமண கோடு, பெண்களுக்கு மட்டும்தான் நீங்க போடுவீங்களா? ஏன் உங்க கட்சியில் உள்ள ஆண்களுக்கு போடமாட்டீங்களா? கேடி ராகவனுக்கு லட்சுமணன் கோடு கிடையாதா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications