திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்கு DMK-தான் 100% காரணம்! திருமாவளவன் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணி உடைந்து விடக் கூடாது என்பதற்காக நான் சிரமப்பட்டேன், ஆனால் அக்கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்கு திமுகதான் 100 சதவீதம் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

தருமபுரியில் விசிக நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறதற்கு திமுகதான் முழு பொறுப்பு. கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம், திமுகவின் அணுகுமுற குறித்து விவாதிக்க வேண்டும்.

Thirumavalavan

தவெகவை குறைத்து மதிப்பிட்டது திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் திமுக கூட்டணி தோல்விக்கு காரணம். கூட்டணி கட்சிகளை ஏன் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக அனுமதிக்கவில்லை?

திமுக கூட்டணி உடைந்து விடக் கூடாது என போராடினோம். ஆனால் கூட்டணியை காப்பாற்றிக் கொள்ள திமுக முயற்சி எடுக்கவில்லை. விசிகவில் இருந்த போது ஆதவ் என்னை முதல்வர் வேட்பாளர் என்றார். பதவி ஆசை இருந்திருந்தால் ஆதவ் முன்வைத்த திட்டத்தை நான் ஏற்றுக் கொண்டிருக்கலாமே

திடீரென தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்ததால் பிற கட்சிகளுக்கு வருத்தம் ஏற்பட்டது. கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு நான் கேட்டேன், ஆனால் விஜய் மீது திமுக ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை?

விஜய் மீது அன்று நம்பிக்கை இல்லை. ஆனால் இன்று எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. தவெகவுக்கு எதிரான அரசியலை திமுக ஏன் செய்யவில்லை.

அதிமுக, பாஜகவின் ஆதரவை விஜய் கேட்கவில்லை, விசிக, காங்கிரஸின் ஆதரவைதான் கேட்டார். திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை விஜய் கேட்ட போது, திமுகவை தனிமைப்படுத்தும் நோக்கம் என நான் முதலில் சந்தேகப்பட்டேன். அதிமுக ஆதரவுடன்தான் நீங்கள் ஆட்சி அமைக்க போகிறீர்கள் என விஜய்யிடம் நான் கூறினேன்.

சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்ற பெயரில் மதச்சார்பற்ற என்ற சொல் இடம் பெற வேண்டும் என நான் கோரினேன். எனது கோரிக்கையை முதல்வர் விஜய் உடனே ஏற்றார். விசிக கூடாரம் காலியாகிவிட்டதால் திருமாவளவன் விஜய்யின் பின்னால் சென்றதாக கூறுகிறார்கள். பதவிக்காக கூட்டணி மாறியதாக என் மீது வன்மத்தை கக்குகிறார்கள். பதவி ஆசை இருந்திருந்தால் காங்கிரஸ் போனதுமே நானும் சென்றிருப்பேன்.

நான் எம்எல்ஏவாக இருந்திருந்தால் அமைச்சராக ஆசைப்பட்டிருக்க மாட்டேன். என் நம்பகத்தன்மையை உடைக்க சிலர் முயற்சி செய்தனர். 2024 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற முயற்சித்தார்கள். ஆனால் கூட்டணி உடையாமல் காத்தேன்.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் நல்லிணக்கம் இல்லை, மதிமுகவை திமுக சின்னத்தில் நிற்க வைத்தார்கள். அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்காதா? கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஏன் வழங்கவில்லை? புதிதாக ஒரு கட்சியை கொண்டு வந்து கூடுதலாக சீட் கொடுத்ததால் பிரச்சினை ஏற்பட்டது. இவ்வாறு திருமாவளவன் திமுகவுக்கு எதிராக பேசியுள்ளார். இவரது பேச்சு இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிர் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியை விட்டு விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளியே வந்ததை அடுத்து அக்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை திமுகவின் அடுத்த கட்ட நிர்வாகிகள் அள்ளி வீசி வரும் நிலையில் திருமாவளவனின் பேச்சு அவர்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+