"பேராபத்து".. பிஜேபியே மேல்.. யாரு விரட்டறாங்களோ இல்லயோ.. ஆர்எஸ்எஸ்ஸை நாங்க விரட்டுவோம்: திருமாவளவன்
விசிக திருமாவளவன் சென்னை ஆர்ப்பாட்டத்தில் பாஜக ஆர்எஸ்எஸ்ஸை கடுமையாக சாடினார்
சென்னை: யாருமே, பாஜக கட்சியில் கூட இருக்கலாம், ஆனால் ஆர்எஸ்எஸ் தொண்டனாக மட்டும் இருக்கவே கூடாது. ஏனென்றால், அது ஒரு ஆபத்தான கட்சி.. தமிழ்நாட்டை பாஜக குறி வைத்து விட்டார்கள்.. அவர்களை யார் விரட்டுகிறார்களோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் விரட்டும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சூளுரைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது... சமீபத்தில் சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ரவி, ஆளுநர் உரையில் இருப்பதை படிக்காமல் விட்டுவிட்டார்.
மேலும், தன்னிச்சையாக தன்னுடைய கருத்துக்களை பேசியிருந்தார்.. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், உடனே எழுந்து ஆளுநர் பேசிய தனிப்பட்ட கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்கக்கோரி தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்... இதையடுத்து ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து உடனடியாக வெளிநடப்பு செய்தார்.

கோபண்ணா
முன்னதாக, ஆளுநர் உரையை கண்டித்து திமுக கூட்டணியை கட்சியினர் சட்டப்பேரவைக்குள்ளேயே முழக்கமிட்டனர். அந்த முழக்கத்தையும் மீறி ஆளுநர் ரவி தன்னுடைய சொந்த கருத்தை பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆளுநரை கண்டித்தும் அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விசிக இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது... இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் கோபண்ணா கலந்து கொண்டனர்.

திருமா ஆவேசம்
மேலும், திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள், நூற்றுக்கணக்கான விசிக தொண்டர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திருமாவளவன் எம்பி உள்பட 500க்கும் மேற்பட்ட விசிக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் அழைத்து செல்லப்பட்டனர். திருமாவளவனின் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.. முன்னதாக, முத்தரசன் பேசும்போது, "ஆளுநராக பொறுப்பேற்றபோது தமிழ்நாடு ஆளுநராகிய நான் என்று தான் பொறுப்பேற்றார். ஆனால் இப்போது தமிழ்நாடு வேண்டாமா?

சென்னாரெட்டி
தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதித்தது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களின் பெயர்களை உச்சரிக்க மறுத்தது போன்ற ஆளுநரின் செயலானது மிகவும் கண்டிக்க கூடிய செயலாக அமைந்திருந்தது. இப்போதுகூட ஆளுநர் எதுக்காக டெல்லிக்கு போய் இருக்கிறார் என்று தெரியவில்லை.. ஒருவேளை, மோடி, அமித்ஷாவை சந்தித்து, "நீங்கள் சொன்ன மாதிரியே நான் தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டுகிறேன்... ஆனால் தனக்கு வரும் எதிர்ப்பினால் என்ன செய்வதென்று தெரிவியவில்லை" என்று சொல்ல தான் டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

வட்டிகட்டிய ஆர்எஸ்எஸ்
இதையடுத்து, திருமாவளவன் பேசம்போது, மம்தா பானர்ஜியும் ஆளுநர் இல்லாமல் சட்டசபையை நடத்தி காட்டி இருக்கிறார்.. தமிழ்நாட்டில் ஆளுநர் சென்னாரெட்டி இல்லாமலேயே சட்டப்பேரவையை ஜெயலலிதா அம்மையாரும் நடத்தி காட்டி உள்ளார்.. எனவே, ஜெயலலிதா போல, தற்போதும் ஆளுநர் இன்றி சட்டப்பேரவையை நடத்த வேண்டும்.. வடமாநிலங்களில் 4, 5 முறை தேர்தலில் வெற்றியை பெற்றும், இங்கே தமிழகத்தில் 10 பேரைகூட தமிழக சட்டசபைக்கு அனுப்ப முடியவில்லை.

ஆபத்தானது
அந்த அளவுக்கு தமிழ்நாடு, பிஜேபி அரசியலுக்கு எதிரான இறுக்கத்தை கொணடிருக்கிற ஒரு மாநிலம். அவர்களின் அரசியல் இங்கே எடுபடாத அளவுக்கு திராவிட அரசியல் என்பது ஆளுமை செலுத்துகிறது. திராவிட அரசியலை திமுக. அதிமுக என்று மட்டும் பார்த்துவிட கூடாது... ஆளுநர் சட்டசபையில் செய்த செயல் மட்டும் பிரச்சனை இல்லை. இவர் தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ஆனதுதான் தான் முக்கிய பிரச்சனையே.. ஆளுநர் ஒரு வடிகட்டிய ஆர்எஸ்எஸ் தொண்டர்.. அவர் பேசும் அனைத்து அரசாங்க நிகழ்ச்சிகளிலும் சனாதனம் என்பது ஒலித்து கொண்டே இருக்கிறது..

திருமாவளவன்
ஆளுநருக்கான தனி அதிகாரம் கிடையாது, தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கீழ் தான் அவரது செயல் இருக்க வேண்டும்.. ஆளுநராக நியமிக்கபட்டவர் அரசியல் கட்சியாளராக செயல் படக்கூடாது. ஆனால் அவர் முழுமையாக அரசியல்வாதியாக மட்டும் தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். யாருமே, பாஜக கட்சியில் கூட இருக்கலாம், ஆனால் ஆர்எஸ்எஸ் தொண்டனாக மட்டும் இருக்கவே கூடாது. ஏனென்றால், அது ஒரு ஆபத்தான கட்சி.. தமிழ்நாட்டை பாஜக குறி வைத்து விட்டார்கள்.. யாரு அவர்களை விரட்டுகிறார்களோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் விரட்டும் என்றார் திருமாவளவன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications