இன்று தலித்- இசுலாமியர் எழுச்சிநாள்! நாடக அரசியலுக்காக அம்பேத்கருக்கு பாஜக அஞ்சலி! திருமா பாய்ச்சல்!
சென்னை: ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதியை 'தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாளாக' விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடைபிடித்து வருவதாகவும் இந்த நாளில் சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம் எனவும் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார்கள் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் நாடக அரசியலைச் செய்து வருவதாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அம்பேத்கர் நினைவுநாள்
திசம்பர் -06, புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாளில், அவர் புதிய இந்தியாவைக் கட்டமைத்திட ஆற்றியுள்ள அவரது அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
அத்துடன், சனாதன சங்பரிவார்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் இதே நாளாகும். ஆகவேதான், ஆண்டுதோறும் இந்நாளை 'தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாளாக' விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடைபிடித்துவருகிறது.

அநாகரிக வெறுப்பு அரசியல்
சிறுபான்மையினரின் சனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்திட இயலும் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் வழி உறுதிப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அத்தகைய போற்றுதலுக்குரிய சனநாயகப் பாதுகாவலரின் நினைவுநாளான இந்நாளில் சங்பரிவார்களின் அநாகரிக வெறுப்பு அரசியலுக்கு எதிரான - சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கிறது.

திருமா வேண்டுகோள்
அதாவது, அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே அம்பேத்கர் சிலைகளுக்கு அல்லது அவரது உருவப் படங்களுக்கு மாலையணிவித்து-மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்துவதுடன், சமூக நல்லிணக்கத்திற்கான உறுதிமொழியையும் இயக்கத் தோழர்கள் ஏற்றிடவேண்டும். பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார்கள் ஒருபுறம் புரட்சியாளர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் நாடக அரசியலைச் செய்து வருகின்றனர். அதே வேளையில், இன்னொருபுறம் அவரது சமத்துவக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை அழித்தொழிப்பதிலே குறியாக உள்ளனர்.

சமூக நல்லிணக்கம்
எனவே, இதனை முன்னுணர்ந்து அவர்களை வெகுமக்களிடையே அம்பலப்படுத்துவதில் உறுதியாகச் செயல்படுவோம். அதற்கான ஒரு நாளாக இந்நாளைக் கடைபிடிப்போம்! சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம்!
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications