வானதியை வேற உள்ளே இழுத்து வந்து.. பாஜகவின் வெற்றி குறித்து.. திருமாவளவன் சொன்ன கூல் பதிலை பாருங்க
பாஜக வெற்றி குறித்து திருமாவளவன் பேட்டி தந்துள்ளார்
சென்னை: வெளியான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவினை அடுத்து, பொதுமக்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.. அத்துடன் பாஜக பெற்றுள்ள வெற்றிகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருந்த தேர்தல் என்பதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும்.
பெரிதாக வன்முறையின்றி அமைதியான தேர்தல் நடந்து முடிந்தநிலையில், அதற்கான ரிசல்ட் நேற்றைய தினம் வெளியானது.. இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இந்த அளவுக்கு ட்விஸ்ட்களை தாங்கி வரும் என்று எதிர்பார்க்கவில்லை..

திருமா
திமுகவின் வெற்றியாக இருந்தாலும் சரி, அதிமுகவின் தோல்வியாக இருந்தாலும் சரி. இதுவரை பெற்றி பெறாத அதிமுகவின் கோட்டைகளை எல்லாம் திமுக வென்றெடுத்துள்ளது இந்த தேர்தலில் திமுகவின் சாதனையாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் சொந்த தொகுதிகளில் மண்ணை கவ்வியது அதிமுகவின் படுதோல்வியாக பார்க்கப்படுகிறது.

திருமாவளவன்
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன், வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாகவும், பாஜகவுக்கு கிடைத்துள்ள குறிப்பிடத்தகுந்த வெற்றி குறித்தும் அவர் சொன்னதாவது: தென்னை மரத்தில் போட்டியிட்டோம்.. தென்னை மர சின்னத்தையும் தேடிப்பிடித்து மக்கள் வாக்களித்து வெற்றியை தந்துள்ளனர்.. விடுதலை சிறுத்தைகள் கட்சி சரியான திசையில் பயணிக்கிறது.. பரந்துபட்ட அளவில் மக்களின் நல்லாதரவையும் நன்மதிப்பையும் பெற்று வருகிறது..

விசிக
ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்காக போராடுகிற ஒரு அரசியல் சக்தி விசிக என்பதை இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலமாக மக்கள் மீண்டும் நிரூபித்து உள்ளனர்.. வெற்றி வாய்ப்பை அளித்த மக்கள் அனைவருக்கும், களப்பணியாற்றிய திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த கட்சியினருக்கும், விசிக சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

வானதி சீனிவாசன்
கணிசமான வெற்றி என்று சொல்ல முடியாது.. ஒன்றிரண்டு இடங்களில் அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றிருக்கலாம்.. அவர்கள் மிகவும் குறி வைத்து வேலை செய்த பகுதி கொங்கு பகுதி.. கோவை மாநகரத்தில் வெற்றி பெறவில்லையானால், தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியைகூட ராஜினாமா செய்துவிடுவேன் என்று ஒருமுறை வானதி சீனிவாசன் தேர்தலுக்கு முன்பு கூறியிருந்தார்.

பாஜக வெற்றியா
ஆனாலும் அவர்கள் குறி வைத்து வேலை செய்த கொங்கு பகுதியில் படுதோல்வியை சந்தித்திருக்கிறார்கள்.. எனவே உள்ளாட்சி அமைப்புகளில் பல ஆயிரங்களில் ஒன்று, அதாவது ஒரு சதவீதம் என்றுகூட சொல்லமுடியாது இந்த வெற்றியை.. ஆயிரக்கணக்கான வார்டுகளில் ஓரிரு இடங்களில் பெற்ற வெற்றியை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ள தேவையில்லை.. அது கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கான வெற்றி இல்லை.. நெக்ளிஜிபிள் என்று சொல்லக்கூடிய வெற்றியைதான் பாஜக பெற்றுள்ளது.

சாதி அமைப்புகள்
ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி, உள்ளாட்சி அமைப்புகளில் சாதி, உள்ளூர், மொழி என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட செல்வாக்கை நம்பி களத்தில் இறங்குவார்கள்.. அதனால், கூட்டணி என்ற அடிப்படையில், போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியும் பாதிக்கப்படும்.. அப்படி பல இடங்களில் போட்டி வேட்பாளர்களில் கூட்டணி கட்சிகளிலும் களத்தில் இறங்கினார்கள்.. அதன்மூலமும் சில வெற்றி வாய்ப்புகளை இழக்க நேர்ந்திருக்கிறது.

சிதறிய வாக்குகள்
அப்படிப்பட்ட அந்த போட்டி வேட்பாளர்களால் சிதறிய வாக்குகளை தாண்டி, 70 விழுக்காட்டுக்கு மேல் விசிகவே பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.. திமுக, திமுக தலைமையிலான கட்சிகள், ஒருங்கிணைந்து போட்டி வேட்பாளர்கள் அனைத்தையும் தவிர்த்துவிட்டு, களம் கண்டிருந்தால் 100 விழுக்காடு வெற்றியையே பெற்றிருக்கலாம்" என்றார்.
Recommended Video

அயராத உழைப்பு
சாதிய- மதவாத, சனாதன சக்திகள் பரப்பிய அவதூறுகள் யாவற்றையும் துடைத்தெறிந்து, விடுதலைச் சிறுத்தைகளின் அயராத உழைப்பையும், அரசியல் நேர்மையையும் அங்கீகரிக்கும் அருஞ்செயலை நிகழ்த்தியுள்ள பொதுமக்கள் யாவருக்கும், காலமெல்லாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். இதன்மூலம் தமிழ்மண் என்றென்றும் சமூகநீதி மண் தான் என்பதை மீண்டும் நிறுவிக் காட்டியுள்ள எமது வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி" என்று மேலும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்











Click it and Unblock the Notifications