தர்மேந்திர பிரதான் பதவி விலகியது மகிழ்ச்சிதான்.. ஆனால் நீட் தேர்வு தொடர்கிறதே.. திருமாவளவன் கவலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருப்பது இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றாலும், நீட் தேர்வு தொடரும் என்பது கவலை அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விசிக சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் போராட்டத்தை தொடங்கியது. அதேபோல் சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் நாடு முழுவதும் விரிவடைய தொடங்கியது.

Thirumavalavan

டெல்லியை தொடர்ந்து சென்னை, மும்பை, பாட்னா, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள், சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் என்று ஏராளமானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் எதிரொலியாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார்.

அதேபோல் கரப்பான் பூச்சி கட்சி முன் வைத்த அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்பவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த போராட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ஒரு மாதத்திற்கு மேலாக இந்தப் போராட்டம் டெல்லியில் நடைபெற்றது. சோனம் வான்சுக்கும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டக் களம் வந்தனர். கட்சி சார்பின்றி அதில் பங்கேற்றனர். இந்த போராட்டம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இந்த போராட்டத்தின் அழுத்தம் காரணமாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருக்கிறார். சிஜேபி கட்சியை சார்ந்த தலைவர்கள், தர்மேந்திர பிரதான் பதவி விலகவில்லை என்றால், பிரதமர் பதவி விலக வேண்டும் என்று அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா அடுத்தக்கட்ட போராட்டத்தை தடுத்திருக்கிறது.

அவருடைய பதவி விலகல் இந்த போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று மகிழ்ச்சி அடைந்தாலும், நீட் தேர்வு தொடரும் என்பது கவலை அளிக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே விசிகவின் நிலைப்பாடு. இந்த கோரிக்கையை முன்னிறுத்தி விசிக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+