பொதுசிவில் சட்டம் போல நாடு தழுவிய மதுவிலக்கு சட்டம் சாத்தியம் இல்லையா? பாஜகவுக்கு திருமாவளவன் கேள்வி
சென்னை: அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற தங்களுக்கு உரிமை உண்டு என மத்திய பாஜக அரசு கூறி வருகிறது; பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற எந்த அரசியல் சாசனத்தின் பிரிவுகள் பயன்படுத்தப்படுகிறதோ அதையே பயன்படுத்தி இந்திய அளவில் மது விலக்கை ஏன் நடைமுறைப்படுத்த முடியாது? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அக்டோபர் 2 மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக கோரிக்கை மனுவை திருமாவளவன், ஸ்டாலினிடம் வழங்கினார். இதனையடுத்து விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவும் பங்கேற்கும் என திருமாவளவனிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: யார் எல்லாம் மதுவிலக்கில் உறுதியாக இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது பொதுவான அறைகூவல். இதை தேர்தலுடன் முடிச்சுப் போடவேண்டாம். இதை எல்லோரும் சேர்ந்து பேசுவோம். மத்திய அரசுக்கு இதில் அழுத்தம் கொடுப்போம். மதுவிலக்கு விவகாரத்தில் மத்திய அரசு தமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்கிற போக்கில் இருக்கிறது. இந்தியா முழுவதுமே போதைப் பொருள் புழக்கம் தீவிரமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் 4 மாநிலங்களைத் தவிர மதுபான வியாபாரத்தை அரசே முன் நின்று நடத்துகிறது. இதற்கு மத்திய அரசு பொறுப்பு இருக்கிறதா? இல்லையா?

அரசியல் சாசனத்தின் 47-வது பிரிவு 4-ன் கீழ் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. அப்படி அந்த சட்டத்தின் கீழ் பொது சிவில் சட்டம் உருவாக்க உரிமை இருக்கிற மத்திய அரசுக்கு ஏன் இதே பிரிவை பயன்படுத்தி மதுவிலக்கு தொடர்பான ஒரு தேசிய கொள்கையை உருவாக்க முடியாது? இதுதான் எங்கள் கேள்வி. அதற்கு ஏன் ஒரு தனிச்சட்டம் கொண்டுவரக் கூடாது? இதுதான் விடுதலை சிறுத்தைகள் கேள்வி. இதில் திமுக உடன்படுவதால் எங்கள் மாநாட்டில் திமுக பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார். இந்த மாநாட்டுக்கு 2 பிரதிநிதிகளையும் அனுப்பி வைத்திருக்கிறார். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications