தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு.. விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு!
சென்னை: தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பது தொடர்பாக மாலை 4 மணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பை வெளியிட உள்ளார். இதனிடையே திருமாவளவனுடன் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே தொடர்ச்சியாக பேசி வருவதாக தெரிய வந்துள்ளது. இதனால் விசிகவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமையுமா என்ற அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், இதுவரை ஆட்சி அமைக்க முடியாமல் போராடி வருகிறது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், தவெக கூட்டணி எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 116ஆக இருக்கிறது.

பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், விசிக உடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று மாலையே விசிகவின் உயர்நிலைக் கூட்டம் கூடி ஆலோசனை நடத்திவிட்டது. இதன்பின் திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு நடத்தினார். இன்று காலை 10 மணியளவிலேயே விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பை வெளியிடுவதாக இருந்தது.
ஆனால் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே தொடர்ச்சியாக திருமாவளவனுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்றும் கூட பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பிவிட்டு கார்கேவுடன் திருமாவளவன் தனியார் ஹோட்டலில் ஆலோசித்திருந்தார். தற்போது விசிக அலுவலகத்திற்கு புதிய சோஃபாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதேபோல் விசிக தொண்டர்களும் அதிகளவில் குவிந்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் திருமாவளவன் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தவெகவினர் திருமாவளவன் என்ன சொல்வார் என்று பரபரப்புடன் காத்திருக்கின்றனர். செய்தியாளர்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் திடீரென விசிக நிர்வாகிகள், மாலை 4 மணிக்கு திருமாவளவன் முடிவை அறிவிப்பார் என்று அறிவித்துள்ளனர். திருமாவளவன் எடுத்த முடிவை அறிவிக்க தாமதம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன் -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார்












Click it and Unblock the Notifications