தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
சென்னை: தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்தும் வரை மொழி வழி தேசியம் பற்றி பேசுபவர்கள் விட்டுப்பிடிப்பார்கள். அப்படியே போகட்டும். திமுகவை வீழ்த்தும் வரை மொழி வழி தேசியம் பேசுபவர்களை பாஜகவினர் விடுவார்கள்.. மொழி வழி மாநிலம் இருக்க கூடாது என்பதே பாஜக கட்சியினரின் திட்டம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் போட்டியிடுகிறார். கடந்த முறை இங்கு 500,229 வாக்குகள் பெற்று விசிக எம்பி வெற்றி பெற்றார்.

அதிமுகவின் சந்திரசேகர் இங்கே 4,97,010 வாக்குகள் பெற்றார். கடந்த முறை கடுமையாக நடந்த போட்டியில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமா பானை சின்னத்தில் வென்றார். இந்த முறை பானை சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் தனி சின்னத்தில் திருமா போட்டியிட உள்ளார். கடந்த முறை திமுக சின்னத்தில் போட்டியிட்ட எம்பி ரவிக்குமாரும் இந்த முறை விசிக சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
பிரச்சாரம்; சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அரியலூர் மாவட்டத்தில் இந்தியா கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது . அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் குன்னம் ராஜேந்திரன் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் திருமா லோக்சபா தேர்தல் தொடர்பாக பேசினார்.
இதில் நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகள் பற்றி திருமாவளவன் பேசினார். அதில், தமிழர்களுக்கு தமிழ்நாடு, தெலுங்கர்களுக்கு ஆந்திரா தெலுங்கானா, கன்னடர்களுக்கு கன்னடா என்று பிரிந்தால் சமஸ்கிருதம் பேசும் கூட்டத்திற்கு எது மாநிலம்? அவர்கள் எங்கே நாடு? வராது.
இதனால்தான் மொழி வழி மாநிலத்தை எதிர்க்கிறார்கள். மொழி வழி மாநிலம் இருக்க கூடாது என்பதே அவர்களின் திட்டம். இதுதான் இந்துத்துவா செயல்திட்டம். இதுதான் மொழி மாநிலத்தை எதிர்க்க அவர்களின் காரணம். இதுதான் பிராமண ஆர்எஸ்எஸ் செயல்திட்டம். இதுதான் அவர்களின் அல்டிமேட் திட்டம். அது உச்சமான செயல்திட்டம்.
தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்தும் வரை மொழி வழி தேசியம் பற்றி பேசுபவர்கள் விட்டுப்பிடிப்பார்கள். அப்படியே போகட்டும். திமுகவை வீழ்த்தும் வரை மொழி வழி தேசியம் பேசுபவர்களை பாஜகவினர் விடுவார்கள். திமுகவை திட்டு, பெரியாரை திட்டு என்று வளர்த்துவிடுவார்கள். வாக்கை பிரிக்க பார்ப்பார்கள். அதுதான் அவர்களின் திட்டம்.
நடிகர்களை அரசியலுக்கு கொண்டு வருவார்கள். யாரெல்லாம் வாக்குகளை பிரிக்கிறார்களோ அவர்களை எல்லாம் தூண்டி விடுவார்கள். நீ போய் கட்சி ஆரம்பி. என்னை திட்டு. ஆனால் வாக்குகளை பிரிக்க வேண்டும். பணம் கூட கொடுக்கிறோம். ஆனால் நீ வாக்குகளை பிரிக்க வேண்டும்.
முதலில் அதிமுகவை வீழ்த்த வேண்டும். அதிமுகவை பலவீனப்படுத்த. பாஜக இரண்டாம் இடம் வரும். அதன்பின் திமுகவை வீழ்த்துவோம். பெரியார் என்ற சகாப்தத்தை காலி செய்வோம். அதன்பின் தமிழ் தேசியம் பேசுபவர்களை காலி செய்வார்கள். இதை செய்ய வேண்டும் என்றுதான் பாஜக செயல்படுகிறது. அண்ணாமலை இதற்காகத்தான் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.
திமுக இதை தடுக்கவே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. விசிக இதற்காகவே களமிறங்கி போராடிக்கொண்டு இருக்கிறது என்று விசிக எம்பி திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
-
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications