பாஜக அழுத்தத்திற்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியம் ஆகிவிடும்.. திருமாவளவன்
சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் இணைய விஜய்க்கு 80 தொகுதிகள் + துணை முதல்வர் பதவி வரை கொடுக்க பாஜக இறங்கி வந்துள்ளதாகவும், இதற்கு விஜய்யும் சம்மதம் சொல்லுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவின் அழுத்தத்தற்கு அடிபணிந்தால், 'நண்பர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்' என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தி வருகிறது. திமுக கிட்டத்தட்ட 6 கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துவிட்ட நிலையில் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதிமுக பாஜக கூட்டணி
மறுபுறம் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் அதிமுக - பாஜக கூட்டணியில் இன்றும் தொகுதி பங்கீடு முடிவடையவில்லை. கூட்டணியை இன்னும் பலப்படுத்த பாஜக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. தேமுதிக திமுக பக்கம் போனதாலும், பாஜக அதிக தொகுதிகளை கேட்பதாலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் திரை மறைவில் நடந்து வந்தாலும், இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அ.தி.மு.க. கூட்டணியில் இணையக்கூடும் என்ற தகவல் தான்.
80 தொகுதிகள் + துணை முதல்வர் பதவி
விஜய்யை என்.டி.ஏ கூட்டணிக்கு கொண்டு வர பாஜக மற்றும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக இருமுறை ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி அதில் தோல்வியுற்றதாகவும், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகின. முதலில் 45 தொகுதிகள் + துணை முதல்வர் பதவி என்று பேசப்பட்டதும், அதற்கு விஜய் ஒத்துவரவில்லை என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து தான் தற்போது மீண்டும் விஜய்க்கு பாஜக புது ஆஃபர் ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி தற்போது 80 தொகுதிகள் + துணை முதல்வர் பதவி வழங்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை டெல்லியில் நடக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் விஜய் இதற்கு சம்மதம் தெரிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திருமாவளவன் கருத்து
தவெக சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்திலும் இதனை மறுக்கவில்லை. இதனால் கிட்டத்தட்ட விஜய் பாஜக கூட்டணியில் இணைய இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் விசிக தலைவர் தொல் திருமாவளவன், "நண்பர் விஜய் பாஜக கூட்டணியில் இணைந்து அவர் எதிர்காலத்தை அவரே சூனியமாக்கிக் கொள்ள மாட்டார்" என்று கருதுவதாக கூறியுள்ளார்.
அழுத்தத்திற்கு அடிபணிந்தால்
2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளையே ஒவ்வொன்றாக தன் கூட்டணிக்கு இழுக்கிற வேலையில் ஈடுபட்டது. இதனால் இப்போது அந்த கட்சி தேமுதிகவை இழந்து நிற்கிறது. அந்த வகையில் தற்போது விஜய்யையும் பாஜக கூட்டணிக்கு இழுக்க முயற்சியில் ஈடுபடுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழுத்தம் கொடுத்து அவரை அடி பணிய முயற்சிக்கிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன.
அவர் அந்த அச்சுறுத்தலுக்கு அடிபணிவார் ஆனால் அவரது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். இது அவருக்கும் தெரியும். பிற மாநிலங்களில் பாஜக எப்படி, சங்க பரிவார் பாஜக எதிர்க்கட்சிகளை நயவஞ்சமாக வலைத்து போடுவது, அல்லது அவதூறு பரப்பி எதிர்ப்பது என்கிற யுக்திகளை கையாளுகிறார்களோ, அதே முயற்சியினை தமிழகத்திலும் அவர்கள் செய்ய முயற்சி செய்கின்றனர். நண்பர் விஜய் அதற்கு இணங்க மாட்டார்.. அவர் எதிர்காலத்தை அவரே சூனியமாக்கிக் கொள்ள மாட்டார் என்பதை நம்புகிறேன்.." என்றார்.
-
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications