தமிழகத்தை காக்க பாஜகவுடன்.. எடப்பாடி பழனிசாமி பயணம் வெற்றிபெற வாழ்த்து.. திருமாவளவன் சொன்ன வார்த்தை!
சென்னை: பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவாரோடு தமிழ்நாட்டை காப்போம் என்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற வாழ்த்துகள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பயணத்தை வரவேற்றுள்ள அவர், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து செல்வதை மட்டுமே விமர்சித்திருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 34 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 7 முதல் ஜூலை 21 வரை இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

இபிஎஸ் சுற்றுப்பயணம்
கோவை, கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு பயணிக்கிறார். இந்த பயணத்தின் போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள், பெண்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாட உள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட பிரச்சாரமாக பார்க்கப்படுகிறது.
கோவை டூ தஞ்சை
முதற்கட்டமாக அதிமுக பலமாக இருக்கும் கொங்கு பகுதியில் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொள்கிறார். கோவையில் தொடங்கும் இந்த பயணம், ஒரு நாளுக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் வீதம், மக்களை சந்திக்க இருக்கிறார். இறுதியாக ஜூலை 21ஆம் தேதி தஞ்சையில் பயணத்தை முடிக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் பயணத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாஜகவுக்கு அழைப்பு
இதன் தொடக்க விழாவில் பங்கேற்க பாஜக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் பேசுகையில், தேர்தலையொட்டி அதிமுக இந்த செயல் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தமிழ்நாடு காப்போம் பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
திருமாவளவன் கேள்வி
ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியோருடன் சேர்ந்து எப்படி தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தேசத்திற்கே அவர்களால் ஆபத்து என்று மக்கள் அணிதிரண்டு வரும் போது, தமிழ்நாட்டை புறப்படுகிற அதிமுகவின் தலைவர் சங்கபரிவாரோடு செல்வது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணி?
ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் அங்கு பாஜக இருக்கிறது என்று திருமாவளவன் கூறி இருந்தார். தற்போது திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் வெற்றி பெற வாழ்த்தி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. மீண்டும் பாஜக மட்டுமே பிரச்சனை என்று திருமாவளவன் அழுத்தி கூறி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications