“எடப்பாடி பழனிசாமியே எதுவும் பேசல..!” அதிமுக எம்எல்ஏக்கள் பற்றி.. திருமாவளவன் சொன்னதை பாருங்க!
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது பற்றி, பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசவில்லை" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும் அவர் பேசியதாவது, "அதிமுகவை தவெகவில் இணைப்பது பற்றி, அமைச்சரின் பேச்சு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதுவும் கருத்து சொல்லவில்லை.

அதிமுக பொதுச்செயலாளரிடம் கேட்க வேண்டிய கேள்வியை எங்களிடம் கேட்கிறீர்கள். அதிமுகவினரை இணைப்போம் என்று தவெக கூறுகிறது எனில், அக்கட்சியினரிடம் கேள்வி கேட்க வேண்டும். குதிரை பேரம் புகார் உண்மையாக இருந்தால்.. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு அதில் அதிகாரம் இருந்தால், உடனடியாக அதில் தலையிட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
அதேபோல ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தவெகவில் இணைந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "அரசியல் களத்தில் இருக்கிறவன் என்கிற முறையில் நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்றாலும் கூட, அதை நேரடியாக விஜயபாஸ்கரிடம் கேட்பதுதான் சரி.
அவர் என்ன காரணத்திற்காக அதிமுகவிலிருந்து வெளியேறினார்? அதிமுகவிலிருந்து ஆட்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது, குதிரை பேரம் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கும் நிலையில், அக்கட்சிக்குள் என்ன நடக்கிறது? என்பது பற்றி ஏன் அதிமுக தலைவர்கள் வாய் திறக்காமல் இருக்கிறார்கள்? ஆவேசப்பட்டு, தவெகவுக்கு எதிராக கொந்தளிக்க வேண்டியவர்கள், அமைதி காப்பதன் பொருள் என்ன?
ஆளுநருக்கு மனு கொடுப்பதை கடமையாக செய்கிறார்கள். தவிர, இதை பொதுமக்களின் ஒபினியனாக மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. பாருங்க எங்க கட்சியை அபகறிக்க பார்க்கிறார்கள்.. என்று பொதுமக்களிடத்தில் முறையீடு கூட செய்யவில்லை. குதிரை பேரத்தில் ஈடுபடுவர்கள் யார்? தவெக எனில், அதன் தலைமையிடத்தில் கேட்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.
என்ன நடந்தது?
மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என மொத்தம் 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஜம்ப் அடித்திருக்கிறார்கள். இதை குதிரை பேரம் என்று திமுக விமர்சித்திருக்கிறது. தவெகவை பொறுத்தவரை தற்போது 106 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கிறார்கள். தனிப்பெரும்பான்மைக்கு இன்றும் 12 எம்எல்ஏக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications