டென்ஷனான சிடிஆர் நிர்மல்குமார்.. நேரத்திற்கு வராத எம்எல்ஏ-க்கள்.. மதுரை தவெகவில் நடக்கும் மோதல்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவெக எம்எல்ஏ-க்களான கல்லாணை மற்றும் கோபிசன் ஆகியோர் பங்கேற்கவில்லை. இதனால் டென்ஷனான அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மேடையில் ஏறி இருக்கையில் கூட அமராமல் வெளியேறினார். இதனால் மதுரை மாவட்ட தவெக நிர்வாகிகள் மத்தியில் மிகப்பெரிய மோதல் வெடித்துள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

மதுரையில் மருத்துவக் கல்லூரியில் அரசு ஆய்வக நுட்புனர் சங்க வெள்ளி விழா ஆண்டு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் 10 நிமிடங்களுக்கு முன்பாகவே வந்துவிட்டார். ஆனால் அழைப்பிதழில் எம்எல்ஏ-க்களான கல்லாணை மற்றும் கோபிசன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. அவர்கள் சரியான நேரத்திற்கு வரவில்லை.

CTR Nirmalkumar

இதனால் டென்ஷனான அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், மேடையில் ஏறிய அடுத்த நொடியே அப்படியே கீழே வந்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் மதுரை மாவட்ட தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சராக சிடிஆர் நிர்மல்குமார் இருந்து வருகிறார்.

ஆனால் தவெக ஆட்சி அமைத்த போது, கல்லாணை அல்லது தங்கப்பாண்டி ஆகியோரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இருவருமே அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இதனால் சிடிஆர் நிர்மல்குமார் மீது இரு தரப்புமே அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

அதுமட்டுமல்லாமல் மாநகராட்சி பணிகளில் சிடிஆர் நிர்மல்குமார் கைகளே ஓங்கியுள்ளன. இன்னும் 7 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள சூழலில், அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மூலம் கவுன்சிலர் சீட் பெற பலரும் முட்டி மோதி வருகின்றனர். அதேபோல் கல்லாணை மற்றும் தங்கப்பாண்டியன் ஆகியோரும் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்க தீவிரமாக உள்ளனர்.

இதன் காரணமாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாருடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் கல்லாணை தரப்பில் நிகழ்ச்சிக்கு வராதததிற்கு பிற காரணங்கள் சொல்லப்படுகிறது. கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால், நிகழ்ச்சிக்கு விரைவாக வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+