"அப்பா நல்லா இருக்காருங்களா தம்பி?" உதயநிதியிடம் கைகுலுக்கி நலம் விசாரித்த சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவேற்காட்டில் திமுக நிர்வாகி வீட்டு திருமண விழாவில் ஒரே மேடையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

சென்னை மதுரவாயலை அடுத்த திருவேற்காட்டில் திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா இல்ல திருமண நிகழ்வு நடந்தது.

Udhayanidhi Stalin

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் வந்த அதே நேரத்தில் அங்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வந்திருந்தார்.

அப்போது உதயநிதியும் சீமானும் பரஸ்பரம் வணக்கம் கூறி கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர். இதையடுத்து நாற்காலியில் உட்கார போகும் போது கூட சீமான் கையை பிடித்து அழைத்து சென்ற உதயநிதி, தனது அருகே உட்கார வைத்தார்.

அது போல் எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக்கையும் உதயநிதி, கை பிடித்து அழைத்து சென்று தனது அருகே உட்கார வைத்துக் கொண்டார். பின்னர் முபாரக்குடன் உதயநிதி பேசினார். அது போல் சீமானும் உதயநிதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தனர்.

உதயநிதியும் சீமானும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் ஸ்டாலினும் சீமானும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டு பேசினர்.

தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்களில் திமுகவின் வாரிசு அரசியல் குறித்தும் அப்போதைய திமுக அரசு குறித்தும் சீமான் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அது போல் திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது குறித்தும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் பெங்களூரை சேர்ந்த நடிகை ஒருவரை தேர்தல் நேரத்தில் திமுக தூண்டிவிட்டு தன் மீது பொய் புகார் கொடுக்க வைப்பதாகவும் சீமான் குற்றம்சாட்டியிருந்தார். அது போல் சீமானுக்கு திமுகவினரும் பதிலடி கொடுத்து வந்தனர். சீமான் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் போதெல்லாம் அந்த நடிகை குறித்து திமுகவினர் விமர்சித்து வந்தனர்.

அது போல் சீமான், பெரியாரை விமர்சித்த போது திமுக கடுமையாக பதிலடி கொடுத்தது. இப்படிப்பட்ட சூழலில் அரசியல் நாகரீகம் கருதி இரு தலைவர்களும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டது வைரலாகி வருகிறது. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+