மீன் மழை பெய்ய போகுது.. வானில் இருந்து கொட்ட போகும் மீன்கள்.. வானிலை வல்லுநர்கள் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வானத்தில் இருந்து மழை பெய்து பார்த்து இருப்பீர்கள்.. ஆலங்கட்டி மழை பெய்து பார்த்து இருப்பீர்கள்.. பனி பெய்து கூட பார்த்து இருப்பீர்கள்.. ஆனால் வானத்தில் இருந்து மீன் மழை பெய்து பார்த்து இருக்கிறீர்களா? அதாவது வானத்தில் இருந்து மீன்.. மழை போல கொட்டி விழுந்து பார்த்து இருக்கீர்களா.. அதுதான் இந்தியாவில் இந்த மாதம் நடக்க போகிறதாம்!

நினைத்துப் பாருங்கள்... பலத்த இடி, மின்னலுடன் ஒரு பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. நீங்கள் கையில் குடையுடன் வீதியில் காலை வைக்கிறீர்கள். அங்கே தார்ச் சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான வெள்ளிக் கெண்டை மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்றன என்றால் நம்புவீர்களா? இதென்ன பாஸ் ஏஐயில் செய்யும் வீடியோ போல இருக்கிறது.. இதெல்லாம் நடக்குமா என்றுதோன்றுகிறதா ?

Fish rain

ஏதோ ஹாலிவுட் சயின்ஸ் பிக்‌ஷன் படக் காட்சி போலத் தோன்றுகிறதா? ஆனால், இது கற்பனையல்ல; உலகின் பல பகுதிகளில் ஆண்டுதோறும் துல்லியமாக நடக்கும் நிகழ்வு ஆகும்.

அது என்ன மீன் மழை?

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் உள்ள யாரோ என்னும் சிறிய பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் மே முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்த விநோதம் அரங்கேறுகிறது. இதை உள்ளூர் மக்கள் லியுவியா டி பெசஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது மீன் மழை'

கடும் புயலும் மழையும் தாக்கி ஓய்ந்த அடுத்த நிமிடம், அந்த ஊர் மக்கள் கைகளில் வாளிகளுடனும் கூடைகளுடனும் தெருவுக்கு ஓடி வருகிறார்கள். காரணம், அன்று இரவு சமைப்பதற்கான மீன்கள் வானத்திலிருந்து இலவசமாக இறங்கியிருக்கும்!

இந்த விசித்திர நிகழ்வை ஆய்வு செய்த நேஷனல் ஜியோகிராஃபிக் விஞ்ஞானிகள் குழு ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையைக் கண்டறிந்தது. வானத்திலிருந்து விழுந்த அந்த மீன்கள் அனைத்துக்கும் 'கண் பார்வை கிடையாது!'

கடலே இல்லாத ஒரு நிலப்பரப்பில், அதுவும் கண் தெரியாத மீன்கள் எப்படி வானத்திலிருந்து கொட்டுகின்றன? விஞ்ஞானிகள் இதற்குக் கூறும் விளக்கம் இன்னும் சுவாரசியமானது.

அது ஏன் கண் தெரியாத மீன்கள்?

இந்த மீன்கள் மேகத்திலிருந்து பொழியவில்லை.. மாறாக, அந்தப் பகுதியின் பூமிக்கு அடியில் இருக்கும் நிலத்தடி நதிகளில் வாழ்பவை. பருவமழையின்போது ஏற்படும் கடுமையான நீர் அழுத்தத்தால், நிலத்தடி குகைகளில் ஏற்படும் விரிசல்கள் வழியாக இந்த மீன்கள் மேலே தள்ளப்பட்டு, சாலைகளில் தேங்கிவிடுகின்றன. பூமிக்கு அடியில்.. நிலத்தடி நதிகளில் வாழ்பவை என்பதால் இதற்கு பெரும்பாலும் கண்கள் இருக்காது!

இந்த விநோதம் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்குமா?

ஹோண்டுராஸ் நாட்டில் நடப்பது போன்ற நிலத்தடி குகை அமைப்புகளோ, குருட்டு மீன்களோ இந்தியாவில் இல்லை என்பதால், அதே பாணியில் இங்கு மீன் மழை பெய்ய வாய்ப்பில்லை. ஆனால், இந்தியாவில் மீன் மழை பெய்வது முற்றிலும் சாத்தியமே; ஏற்கனவே பலமுறை நடந்தும் இருக்கிறது!

தற்போது இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இத்தகைய அரிய வானிலை நிகழ்வுகள் அரங்கேற அதிக வாய்ப்புகள் உள்ளன என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இந்தியாவில் நடக்கும் மீன் மழைக்குக் காரணம் பூமிக்கு அடியில் இருக்கும் குகைகள் அல்ல.. அதற்கு காரணமே வேறு!

மீன் மழையின் பின்னால் இருக்கும் அறிவியல்

இந்தியாவில் பலத்த புயல் அல்லது பருவமழைக் காலங்களில், கடலின் மீதோ அல்லது பெரிய ஏரிகளின் மீதோ சுழல்காற்றுகள் உருவாகும். இதை அறிவியல் பூர்வமாக வாட்டர்ஸ்பவுட் என்று அழைப்பார்கள். இது தண்ணீருக்கு மேல் தோன்றும் ஒரு மினி-டொர்னடோ ஆகும்.

இந்த நீர்ச்சுழல் மிகக் கடுமையான வேகத்தில் சுழன்று செல்லும்போது, நீர்நிலைகளின் மேல்மட்டத்தில் கூட்டமாக நீந்திக் கொண்டிருக்கும் சிறிய மீன்கள், தவளைகள் அல்லது நண்டுகளை அப்படியே அள்ளி வான்வெளியில் இழுத்துக் கொள்ளும். மேகக் கூட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் இந்த நீர்வாழ் உயிரினங்கள், பலத்த காற்றின் வேகத்தால் பல கிலோமீட்டர்கள் தூரத்திற்கு அடித்துச் செல்லப்படும்.

காற்றின் வேகம் குறையும்போது, அந்த மேகங்கள் மழையாகப் பொழியும் இடத்தில், அவையும் நிலத்தில் வந்து விழுகின்றன. இது ஏற்கனவே இந்தியாவில் நடந்துள்ளது.

ஜூலை 2022ல் தெலங்கானாவில் தொடர் கனமழை பெய்துகொண்டிருந்த ஒரு நள்ளிரவில், சாய் நகர் பகுதி மக்கள் காலையில் எழுந்து பார்த்தபோது அதிர்ந்துபோனார்கள். வீதிகள் முழுவதும் நூற்றுக்கணக்கான சிறிய மீன்கள் உயிருடன் துள்ளிக் கொண்டிருந்தன.

டிசம்பர் 2018ல் ஆந்திரப் பிரதேசத்தில் 'பெத்தாய்' புயல் கரையைத் தாண்டியபோது, வங்கக் கடலில் இருந்து பலத்த காற்றினால் உறிஞ்சப்பட்ட மீன்கள், கடலோரக் கிராமங்களின் மேல் மழையாகக் கொட்டின. தார்ச் சாலைகள் முழுவதும் வெள்ளிப் படலம் போல மீன்கள் சிதறிக் கிடந்தன.

பிப்ரவரி 2008ல் கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு திடீர் இடி மின்னல் மழையின்போது, வயல்வெளிகளில் மீன்கள் வானத்திலிருந்து விழுந்தன. இது பொதுவாக ஜூலை டூ டிசம்பர் வரை நடக்க வாய்ப்புள்ளதால்.. இந்த வருடம் நடக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே, இந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் நீங்கள் வெளியே செல்லும்போது பலத்த இடி முழக்கத்துடன் புயல் வீசினால், சற்று கவனமாக இருங்கள். பூமிக்கு அடியிலிருந்து மீன்கள் வராவிட்டாலும், மேகங்கள் தலையில் மீன் ஒன்றை தூக்கி வீசலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+