இப்போதுதான் சிஎம்டிஏ சரியான ரூட்டில் போகுது.. சென்னைக்கு அருகே உருவெடுக்கும் பிரம்மாண்ட நகரம்!
சென்னை: சென்னை மாநகராட்சி CMDA இறுதியாக சரியான பாதையில் செல்ல தொடங்கி உள்ளது. சென்னைக்கு வெளியே புறக்கணிக்கப்பட்டு வந்த திருமழிசை நவீன நகரமாக உருவெடுக்க உள்ளது. திருமழிசைக்காக 1,605.75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூருக்கு அருகே சாட்டிலைட் சிட்டியாக வளர்ந்து.. அப்படியே உயர்ந்து நிற்கும் ஓசூர் நகரம்.. தமிழ்நாடு முழுக்க பல பகுதிகளுக்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளது. அந்த வகையில் சென்னைக்கு அருகே இதேபோல் சாட்டிலைட் சிட்டிகள் உருவாக்கப்பட உள்ளன. அந்த வகையில் சென்னைக்கு அருகே புதிய சாட்டிலைட் சிட்டியாக திருமழிசை உருவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

🔹ஒட்டுமொத்தமாக 7 ஏரியாக்களில் நிலங்களை எடுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று CMDA தெரிவித்துள்ளது.
🔹2019ல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும் அதன்பின் இதில் பெரிய முன்னேற்றம் எதுவும் நிகழவில்லை. சென்னை நகரின் மேற்கு புறநகரில் உள்ள திருமழிசை செயற்கைக்கோள் நகரத்தில் அலுவலக இடம், ஷாப்பிங் மால் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. அதேபோல் குடியிருப்பு கட்டிடங்கள் அதிக அளவில் அமைக்கப்பட உள்ளன.
🔹லூப் ரோடு இதன் மூலம் 30 மீட்டர் அகலமாக மாற்றப்படும். இங்கே எப்எஸ்ஐ அதிகரிக்கப்படும். இதன் மூலம் உயரமான கட்டிடங்கள் அனுமதிக்கப்படும்.
🔹லூப் ரோடு ஓஆர்ஆர் சாலை வழியாக இணைக்கப்படும்.
🔹மிகப்பெரிய அளவில் நடைபாதை, நீர் நிலைகள், திரைப்பட நகரம், ஐடி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் இங்கே கொண்டு வரப்படும்.
🔹 கையகப்படுத்தப்பட்ட நிலம் பின்வருமாறு பிரிக்கப்படும்: சாலை பயன்பாட்டிற்கு ~10%, குடியிருப்பு பயன்பாட்டிற்கு ~41%, வணிக பயன்பாட்டிற்கு ~20%, ஓய்வு பூங்காக்கள் மற்றும் நீர்நிலை பயன்பாட்டிற்கு 16% வழங்கப்படும்.
🔹சாக்கடை அமைப்புகள் , தரைக்கு கீழே மின்சாரம், மற்றும் பூங்காக்கள் என அனைத்து அடிப்படைக் கட்டமைப்புகளும் மொத்தமாக மாற்றப்படும்.
.
🔹பிலிம் சிட்டி இங்கே அமைக்கப்படும்.
🔹TNHB க்கு திருமழிசையில் 127 ஏக்கர் நிலம் உள்ளது, அதில் சுமார் 30 ஏக்கர் நிலம் நகருக்குள் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்தப்படும். சுமார் 20 ஏக்கர் வணிக இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த நிலப்பரப்பு சென்னை பெருநகரப் பகுதிக்கு உட்பட்டது. இங்கே மேலும் நிலம் கையகப்படுத்தும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
🔹இந்த பகுதியில்தான் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரவிருக்கிறது. 427 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
🔹முதல் கட்டமாக பெங்களூர், தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற வடக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வரவிருக்கும் பேருந்து நிலையங்களில் மற்ற அரசின் பயன்படுத்தாத வாகனங்களை நிறுத்துவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது.
🔹தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) சென்னையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த பிரமாண்ட நகரத்தை உருவாக்கி வருகிறது. விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர் இதுவரை உருவாக்கத்தை நிலையில் விரைவில் புதிய டிபிஆர் தயாரிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications