தேமுதிக நிலைமை மோசம்.. திருச்சியில் திண்டாடும் இளங்கோவன்.. திகுதிகு பிரச்சாரத்தில் காங்., அமமுக
சாருபாலா தொண்டைமான், திருநாவுக்கரசர்- ஸ்டார் தொகுதியான திருச்சியை வெல்வது யார்?
Recommended Video

சென்னை: இருக்கும் 40 தொகுதிகளில் எந்த தொகுதிக்கு போட்டி இருந்ததோ இல்லையோ.. ஆனால் இந்த திருச்சி மீது மட்டும் எல்லாருக்குமே ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது!
திமுக தரப்பில் முதன்முதலில் இந்த தொகுதியை கேட்டது வைகோதான். அதற்காகவே அந்த தொகுதியில் 2 மாசம் தங்கி நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற்கு முன்பே திருச்சி எப்பவுமே நமக்குதான் என்று நம்பி இருந்தவர் தயாநிதி மாறன்.
இதில் திடீரென சம்பந்தமே இல்லாமல் சபரீசனின் பெயரும் அடிபட்டது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் டெல்லி லாபி மூலம் திருச்சியை திருநாவுக்கரசர் கேட்கவும்.. ஒட்டுமொத்த பேரும் கப்சிப்! திருநாவுக்கரசர்தான் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வருவதற்குள் ஆதரவாளர்களே அதை அறிவித்து பிரச்சாரத்திலும் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.

நெருக்கம்
அரசியலின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர். எம்ஜிஆரின் ஆட்சியில் துணை சபாநாயகர், வீட்டு வசதித்துறை அமைச்சர் என தன்னை நிலைநிறுத்தி கொண்டவர். அறந்தாங்கி தொகுதியில் எந்த வீட்டில் நல்லது, கெட்டது என்றாலும் அங்கே திருநாவுக்கரசர் இருப்பார். அந்த அளவுக்கு தொகுதி மக்களுடன் நெருக்கம், இணக்கம்!பல கட்சி மாறினாலும் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக என்றுமே ஜொலிக்கிறார் திருநாவுக்கரசர்! இதைதவிர, இவருக்கு திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சப்போர்ட் முழுசாக கிடைத்து வருகிறது பெரிய பலம்!

சாருபாலா
திமுக, அதிமுக கட்சிகள் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் சரி, ஒரு செல்வாக்கு மிக்க நபரை தனது கட்சி சார்பில் நிறுத்த முடிவு செய்த டிடிவி தினகரன், அதன்படி சாருபாலா தொண்டைமானை களம் இறக்கி உள்ளார். இவர் செல்வாக்கு மிக்க நபர். இவரது மூதாதையர்கள் புதுக்கோட்டையில் மன்னராக இருந்ததாலும், இப்போதும் சாருபாலாவுக்கு திருச்சியில் நல்ல மதிப்பு இப்போதும் உள்ளது. மேயராக இருந்தவர்.
நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

வாண்டையர் சமூகம்
வாண்டையர் சமூகத்தின் ஓட்டுக்கள் கணிசமாக இவருக்கு விழ வாய்ப்புள்ளது. மகளிருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காகவும் இவர் காங்கிரசில் இருந்ததில் இருந்தே தொகுதியை பற்றி நன்றாக தெரிந்தவர் என்பதாலும்தான் டிடிவி இவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இளங்கோவன்
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு இதே திருச்சிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வேட்பாளராக இளங்கோவன் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு இது சொந்த தொகுதிதான். தேமுதிகவுக்கு இங்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. மேலும் இந்த தொகுதியில் உள்ள வாண்டையர் சமூகத்தார் கிட்டத்தட்ட நாயக்கர் சமூகத்தில் இணைந்து வருபவர்கள் போல தெரிகிறது. அதனால் தேமுதிகவுக்கு ஓரளவு பலம்தான்.

விஜயகாந்த்
இதைதவிர தேமுதிக நிர்வாகிகளும் திருச்சி தொகுதியில் சமீப காலமாக களப்பணியில் ஈடுபட்டு மக்கள் கவனத்தை தங்கள் வசம் திருப்பி உள்ளனர். இருந்தாலும் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வராதது, பெரிய மைனஸ்! ஆக வெறும் கூட்டணி பலத்தை நம்பி களமிறங்கினாலும் திருநாவுக்கரசு, சாருபாலா தொண்டைமான் போன்ற ஸ்டார் வேட்பாளர்களுக்கு நடுவில் இளங்கோவன் சிக்கி திண்டாட போகிறார் என்று சொல்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications