"ரோட்டுல திரியறதை கூட்டிவந்து, டிரஸ் கழட்டறானுங்க.. வீடியோ பொய்".. திருநாவுக்கரசின் தாய் சொல்கிறார்
திருநாவுக்கரசு குறித்து அவரது தாய் லதா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

கோவை: "ஏதோ ரோட்டுல திரியற ஒரு மேட்டரை கூட்டிவந்து, டிரஸ் கழட்டறான்னு என் பையன் மேல அந்த பொண்ணு பொய்யான புகார் சொல்லியிருக்கிறா"ன்னு திருநாவுக்கரசின் தாய் ஆவேசமாக கூறியுள்ளார்.
பொள்ளாச்சி சம்பவத்தில் திருநாவுக்கரசு கைதானதில் இருந்தே, "என் பையன் நல்லவன், அவனுக்கு ஒன்னுமே தெரியாது" என்று வாதாடி கொண்டிருப்பவர் அவரது தாய் லதா!
இந்நிலையில் அவர் மகனை பற்றி பேசின வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.
அதில், அவர் சொல்லி இருப்பதில் முக்கியமான விஷயம் இதுதான்!

50 பேர் அடிச்சாங்க
"என் பையனை தப்பா நான் வளர்க்கவும் இல்லை, அவன் அப்படி செய்யறவனும் இல்லை.. பைனான்ஸ்ல என் பையன் வளர்ந்துடுவான்னு பரமகுரு, ஆனந்த், லோக விக்னேஷ், இவனுங்க எல்லாம் பொறாமை. 6 லட்சம் உனக்கு தர வேண்டிய பணத்தை தர்றோம் வாடான்னு கார்ல என் பையனை அவனுங்க கூட்டிட்டு போய், காட்டுக்குள்ள 50 பேர் வெச்சு அடிச்சு போட்டுட்டாங்க.

போலீஸ்
அன்னைக்கு அவன்கிட்ட இருந்து புடுங்கின செல்போன்தான் அது. அது நடந்து ஒரு வாரம் கழிச்சுதான் இந்த விஷயமே வெளியே வருது. இது சனிக்கிழமை நடந்து முடிஞ்சிடுச்சு. அடுத்த சனிக்கிழமைதான் ஆஸ்பத்திரிக்கு போலீசு வருது.

வீடியோ
பண பலம், அரசியல் பலம், ஆள் பலத்தை வச்சு என் குடும்பத்தை நாசமா பண்ணிட்டாங்க. அந்த 8 நாள் என் பையன் செல்போன் யார்கிட்ட இருந்தது? அவங்கதான் அந்த செல்லுல எல்லா பொம்பளங்க வீடியோவையும் ஏத்தி விட்டிருக்காங்க.

டிரஸ் கழட்றது யார்?
டிரஸ்ஸ கழட்டினான், அத கழட்டினான், இத கழட்டினான்னு சொல்றாங்க? என் பையனா டிரஸ் கழட்டினான்? ஒரே ஒரு வீடியோவில என் பையன் மூஞ்சு இருக்குதா? நேத்து ஒரு வீடியோ வெளியே விட்டிருக்காங்க. அதில ஒரு பொண்ணு அழுகுது.. அந்த புள்ளயோட டிரஸ் கழட்றது என்ன என் பையனா? என் பையன் இருக்கிற வீடியோவை காட்ட வேண்டியதுதானே?

பணம் குடுத்து செட்டப்
அந்த புள்ள அழுகற சத்தம் கேட்குது.. ஒரு பொண்ணை அழுகவிட்டுக்கூட இப்படி வீடியோ எடுக்கலாமே? பரமகுருதான் ஆள் வச்சு பணம் குடுத்து, ஏதோ ரோட்டில திரியற ஒரு மேட்டரை கூட்டிட்டு வந்து டிரஸ்ஸ கழட்ட வச்சு வீடியோ எடுத்திருக்காங்க. அதில இருக்கிற புள்ளயும் பொய்.. வீடியோவும் பொய்"
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications