தேர்தலில் தோற்கப்போகும் கட்சிக்கு யார் முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன? -திருநாவுக்கரசர்
சென்னை: தேர்தலில் தோற்கப்போகும் கட்சிக்கு யார் முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வினவியுள்ளார்.
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியிடம் தான் ஓ.பன்னீர்செல்வத்தை விட வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவரை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்ததற்கான காரணம் இருக்கும் எனக் கூறினார்.

அதிமுக தொடர்ந்து 10 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி செய்து வருவதால் மக்களுக்கு ஆட்சி மீது இயல்பாகவே வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தன்னால் கண்கூடாக பார்க்க முடிவதாகவும் திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார். மேலும், ஜெயலலிதாவே இருந்திருந்தால் கூட வரும் தேர்தலில் அவரால் முதலமைச்சராக வர முடியாது என்பது தான் யதார்த்தம் எனத் தெரிவிக்கிறார் திருநாவுக்கரசர்.
அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்காது என்றும் இதனால் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால் என்ன எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தினால் என்ன அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என திருநாவுக்கரசர் எம்.பி. கூறியிருக்கிறார். இதனிடையே அதிமுகவில் இப்போது ஏற்பட்ட குழப்பமே தேவையற்ற குழப்பம் என அவர் தெரிவிக்கிறார்.
இந்த விவகாரத்தில் பாஜகவின் ரோல் நிச்சயம் இருக்கும் எனக் கூறிய திருநாவுக்கரசர், நடக்காத ஒரு நிகழ்வுக்கு கற்பனை செய்துகொண்டும் கனவில் மிதந்துகொண்டும் போட்டியிட்டு வருவதாக விமர்சித்தார். திருநாவுக்கரசரை பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கே அரசியலில் சீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications