விஜய் ஆட்சியைக் கலைக்க சதி.. எனக்கு அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! திருநாவுக்கரசு திட்டவட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பியது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி வரை பேரம் பேசியதாக எழுந்த புகாரில் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், குதிரை பேரம் வழக்கில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. யூடியூபரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான திருநாவுக்கரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்கவும், த.வெ.க அரசை கவிழ்க்கும் நோக்கிலும் ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு மறுத்தபோது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த புகாரில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் யூடியூபரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான திருநாவுக்கரசு உட்பட சிலரை கைது செய்தனர்.

Thirunavukkarasu

இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த யூடியூபரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான சென்னையைச் சேர்ந்த திருதாவுக்கரசு குதிரை பேரம் தொடர்பான வழக்கில் தனக்கும், தனது நிறுவனத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்

தொடர்ந்து பேசிய அவர்," கடந்த 28 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். தற்போதைய 6 மாத கால ஆட்சி குறித்த ஆய்வு நடத்தி வருகிறேன். இந்நிலையில், குதிரை பேரம் விவகாரத்தில் திமுக, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோருடன் இணைத்து என் பெயரையும், புகைப்படத்தையும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

குமாரபாளையத்தைச் சேர்ந்த என் உறவினரான அசோக்குமாரின் தாயாரின் உடல்நலம் விசாரிக்கச் சென்றதைத் தவறாகச் சித்தரித்து, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருடன் இணைத்து என் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் என்னைக் காவலில் எடுத்து கட்டாயப்படுத்தி, கார்த்தி ரமேஷ் பெயரைச் சொல்லுமாறு அழுத்தம் கொடுத்தனர்.

எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. எனது அலுவலகம் மற்றும் வீட்டின் முன்பு காவல்துறையினரை நிறுத்தி வைப்பதும், எனது தொலைபேசியை ஒட்டுக்கேட்பதும் எனது தனிமனித சுதந்திரத்தைப் பாதிப்பதோடு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

ஆதாரமற்ற இந்த வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு நிரபராதி என நிரூபிப்பேன். இனியும் என் பெயரையோ, புகைப்படத்தையோ சமூக வலைதளங்களில் தவறாகப் பயன்படுத்தி அவதூறு பரப்பினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் அவதூறு வழக்குத் தொடர்வேன். இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டுமெனில், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம். மேகாலயா ஆபரேஷன் மற்றும் குதிரை பேரம் விவகாரங்களை திசைதிருப்பவே என் மீது பழி போடப்படுகிறது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+