இன்று தொடங்கிய.. சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்.. டிக்கெட் விலை என்ன? வசதிகள் என்னென்ன?
சென்னை: சென்னை திருநெல்வேலி இடையே இன்று வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலின் டிக்கெட் எவ்வளவு என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து வந்தே பாரத் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு உள் மாநில வந்தே பாரத் சேவை உள்ளது. அதாவது சென்னை - கோவை இடையே உள்ளது. மாநிலத்திற்கு வெளியே ஒரு வந்தே பாரத் சேவை உள்ளது. சென்னை - பெங்களூர் - மைசூர் வரை உள்ளது. இது போக மாநிலத்திற்கு உள்ளே மேலும் ஒரு சேவை தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில்தான் இன்று சென்னை - திருநெல்வேலி இடையே புதிய சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான பரிந்துரை முன்னதாக தென்னக ரயில்வே மூலம் கொடுக்கப்பட்டது. 8 மணி நேரத்தில் சென்னை டூ நெல்லை செல்லும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்காக டிராக்கை சரி செய்ய வேண்டும். இந்த பணிகள் முடிந்துவிட்டன. குறுகிய வளைவுகளை நீக்க வேண்டும். இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக பணிகள் முடிந்துள்ளன. இதனால் இன்று சென்னை - திருநெல்வேலிக்கு 8 மணி நேர ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இந்த சேவையை தொடங்கி வைத்தார்.
சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலுக்கான எண் ஒதுக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்: இந்த ரயில் 8 பெட்டிகளை கொண்டது. 8 மணி நேரம் பயணிக்கும். ஒரு டிக்கெட் சென்னை டூ திருநெல்வேலி ரூ.1620 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி சொகுசு வகுப்பு 3205 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 120- 140 கிமீ வேகத்தில் இந்த ரயில் செல்லும். 660 கிலோ மீட்டர் தூரத்தை சரியாக 8 மணி நேரம் 2 நிமிடத்தில் கடக்கும்.காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வரும்.
இன்னொரு பக்கம் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வரும். இதுதான் ரயில் சேவையின் நேரம்.
நிறுத்தங்கள்: இந்த ரயில் எந்தெந்த நிறுத்தங்களில் நின்று செல்லும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்று திருநெல்வேலி அடையும்.
மேல்கட்ட நிறுத்தங்களில் எல்லாம் இந்த ரயில் நிற்கும். இது போக கூடுதலாக ஒரு 1-2 நிறுத்தங்களில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஜங்ஷன் அல்லாத மற்ற பெரிய ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிற்கும் வாய்ப்புள்ளது (ஆனால் முதல் பயணத்தில் இல்லை) என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என்கிறார்கள்.
கவனம் பெறும் வந்தே பாரத்: வந்தே பாரத் ரயில் மக்கள் இடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications