திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மதுரை ஆட்சியர்!
சென்னை: மதுரை திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர் பிரவீன் குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நோக்கத்தில் இப்படி செய்யவில்லை என்றும், மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாலேயே 144 தடை உத்தரவு போடப்பட்டதாக மதுரை ஆட்சியர் நீதிமன்றத்தில் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என்பதால் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், அவமதித்ததாக மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயலர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாத சூழல் அன்று ஏற்பட்டது என்றும், அதன் காரணமாகவே 144 தடை உத்தரவு போடப்பட்டது என்றும் கூறியிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவினை மீற வேண்டும் என்று வேண்டும் என்றே இதனை செய்யவில்லை. அப்போது இருந்த சூழல் காரணமாகவே 144 தடை உத்தரவு போடப்பட்டது. சட்டம் ஒழுங்கு, அமைதி, மத கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பித்தோம். தவறாக இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. தீபம் ஏற்றும் நாளில் போலீசாரின் பேரி கார்டுகளை எல்லாம் தூக்கி எறிந்தனர்.
அடுத்தடுத்து வந்த பிரச்சினைகள், மத கலவரம் ஏற்படும் சூழல் இருந்தது. இதனாலேயே நாங்கள் அவ்வாறு 144 தடை உத்தரவு பிறப்பிக்க இருந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதேபோல் காவல் ஆணையர் லோகநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான பதில் மனுவில் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியிருந்த தகவலே இடம்பெற்றிருந்தது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications