முருகனுக்கு 2 மனைவி.. அதற்காக 2 இடத்தில் எல்லாம் விளக்கு ஏற்ற முடியாது.. அறநிலையத்துறை வைத்த வாதம்
சென்னை: முருகனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தாலும், தீபம் இரண்டு இடத்தில் ஏற்றப்பட முடியாது. ஒரு இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது மரபு என்று அறநிலையத்துறை இணை ஆணையர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என். ஜோதி குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை இருநீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு வந்தது. அனைத்து மேல்முறையீடுகளும் நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளன.
அப்போது தமிழக அரசு சார்பில் கோவில் அருகே தர்கா உள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் வழக்கு - அறநிலையத்துறை வாதம்
அறநிலையத்துறை இணை ஆணையர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என். ஜோதி தனது வாதங்களை உயர் நீதிமன்றத்தில் முன்வைத்தார். அவர் வைத்த வாதத்தில், மத்தியப் பிரதேசத்திலிருந்து மதுரைக்கு வந்த திகம்பர முனிவர்கள் (ஆடைகள் அணியாத துறவிகள்), பொதுமக்களின் பார்வைக்குத் தங்களை வெளிப்படுத்தாமல் மலைகளில் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக, பெண்கள் அவர்களைப் பார்க்காதவாறு ஒதுங்கிய இடங்களிலேயே அவர்கள் தங்கினர்.
இந்த திகம்பர முனிவர்கள் பெரும்பாலும் ஒன்று கூடி இரவு நேரங்களில் விவாதிக்கும்போது, வெளிச்சத்துக்காக இந்தத் தூண்களைப் பயன்படுத்தினர். ஆகவே, இந்தக் கம்பங்கள் கார்த்திகை தீபத்திற்காக அல்ல, மாறாக முனிவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட வெளிச்சத்துக்காகவே உருவாக்கப்பட்டவை என்று ஜோதி வாதிட்டார்.
இந்தத் தூண்களில் உள்ள கல்வெட்டுகள் குறித்த புத்தகச் சான்றுகள் தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சமணர் மலையில் உள்ள தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டுகள் திருப்பாங்குன்றத்திலும் இருக்கின்றனவா என்றும், இது தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இரு இடங்களுக்கும் காலங்கள் வேறுபடக்கூடும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் ஜோதி, இத்தூண்களின் தன்மையை மாற்றும் எந்த முயற்சியையும் அனுமதிக்கக் கூடாது, ஏனெனில் இது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகிய முறை குறித்த சாதாரண அணுகுமுறையையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.
முருகனுக்கு இரண்டு மனைவிகள்
பிற்பகல் 2:15 மணிக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு பிரதி அனுப்பப்பட்டு, அதே நாளில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறது என்றும், அறநிலையத்துறை வைணவம், தென்கலை, வடகலை போன்ற பல்வேறு சமயங்களை நிர்வகிப்பதால் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு இங்கே கவனிக்கப்பட வேண்டும். இது பொது ஒழுங்குக்கு உட்பட்டது , இதன் அடிப்படியில் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். இதுவரை அந்தத் தூணில் தீபம் ஏற்றப்படவே இல்லை, எனவே அதன் தன்மையை மாற்ற முடியாது. ஒவ்வொரு தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் கோர முடியாத. பிறப்பிக்கப்பட்டால் என்னவாகும்? இரண்டு இடங்களில் விளக்கு ஏற்றுமாறு உத்தரவிடுவது எங்கும் நடக்காது. முருகனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தாலும், தீபம் இரண்டு இடத்தில் ஏற்றப்பட முடியாது. ஒரு இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது மரபு என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications