Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருத்தணி சம்பவம்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறனை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை 17 வயதுடைய நான்கு புள்ளிங்கோ சிறுவர்கள் ஓடும் ரயிலில் அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் போட்டனர். அதன் பின்னர் அந்த இளைஞருக்கு நடந்த சம்பவம் தேசிய அளவில் பேசுருளாகி உள்ளது. இது போன்ற அரைடவுசர் சுள்ளான்கள் தவறான வழிக்கு போவதற்கு லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், பா ரஞ்சித், நெல்சன் போன்றவர்களின் படங்களும் ஒரு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜை கடுமையாக விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், " * திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை 17 வயதுடைய நான்கு புள்ளிங்கோ சிறுவர்கள் ஓடும் ரயிலில் அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் போட்டனர்.

Thiruttani incident blue sattai maran lambasts director Lokesh Kanagaraj and Vetrimaaran

* பிறகு அவர் அங்கிருந்து இறங்கி நடந்தபோது.. பின்தொடர்ந்தது.. தனியிடத்திற்கு கடத்தி சென்று கொடூரமாக வெட்டி வீழ்த்தி.. அதையும் வீடியோ எடுத்துள்ளனர்.

* இது தேசிய அளவில் செய்தியாக மாறியுள்ளது. பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

* 18 வயது கூட நிரம்பாத அரை டவுசர்கள் மனதில் இவ்வளவு வன்மவெறி ஏற‌..சமீபகாலமாக வரும் படங்களும் முக்கிய காரணம்.

* ரத்தம், துப்பாக்கி, கத்தி என படத்தின் போஸ்டர்களே ரத்தக்களறியாத்தான் இருக்கின்றன.

* படத்தில் போதை மருந்து கடத்தல், சாராய குத்துப்பாட்டு, ரத்தம் தெறிக்கும் வன்முறை, ஆபாச வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன.

* படம் முழுக்க இப்படியான காட்சிகளை வைத்துவிட்டு.. கடைசியில் drug free society, மயிரு free society என தத்துவம் பேசுவார்கள்.

* பல இயக்குனர்கள், ஹீரோக்கள் இப்படியான எழவெடுத்த குப்பைகளை வேண்டுமென்றே எடுக்கிறார்கள்.

* காரணம் கேட்டால் பழியை தூக்கி மக்கள் மீது போடுவார்கள். மக்கள் ரசிப்பதால் இப்படி எடுக்கிறார்களாம்.

* தக் லைஃப், கூலி போன்றவற்றை மக்கள் ஃப்ளாப் ஆக்கிவிட்டார்கள். ஆகவே இந்த genre ஐ நிறுத்தி விடுவீர்களா?

* வில்லன் செய்யும் அனைத்தையும் இப்போது ஹீரோ எனும் தடித்தாண்டவராயன்கள் செய்து வருகிறார்கள்.

* இந்த ரத்த மற்றும் கஞ்சா சாக்கடை படங்கள் எடுத்து Gen Z எனப்படும் தவிட்டு தற்குறிகளை.. வன்முறையை கொண்டாடும் கோமாளிகள் மற்றும் கொடூர அரக்கர்களாக மாற்றி வருகிறது தமிழ் மற்றும் இதர மாநில gangster படங்கள்.

* இதில் லோகேஷ் கனகராஜ் எனும் நபருக்கு முக்கிய பங்குண்டு.

* பல ஆண்டுகள் கழித்து ரஜினி படத்திற்கு A சான்றிதழ் வாங்க வைத்த பெருமை இவரையே சாரும். அதற்கு ரஜினியும் பொறுப்பு.

* தற்போது இந்த புண்ணியவான் ஹீரோவாக நடிக்கும் DC படத்தின் போஸ்டர் லட்சணத்தை பாருங்கள்.

* இயக்கம் அருண் மாதேஸ்வரனாம். ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல.

* நீங்கள் கோடிகளில் சம்பாதிக்க இளைஞர்கள் மத்தியில் இப்படி கொடூர வன்முறை மற்றும் போதை கலாச்சார காட்சிகளை தொடர்ந்து உங்கள் இருவரின் படங்களிலும் வைப்பது கேவலமாக இல்லையா?

* உங்கள் வீட்டில் ஒருவரை இப்படி நான்கு மைனர் சிறுவர்கள் வெட்டி சாய்த்தால் எப்படி இருக்கும்? அந்த வடமாநில இளைஞரின் குடும்பத்தார் மனநிலையை ஒருநிமிடம் யோசித்து பாருங்கள்.

* சில ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து.. அனாதையாக வெட்டுப்பட்டு கிடக்கிறார். இனி இவரது குடும்பத்தின் நிலையென்ன?

* இந்த பாவத்தில் ஒரு பங்கு உங்களுக்கும் உண்டு. அது உங்களையும் ஒருநாள் துரத்தும்.

* ரத்த வெறி, போதை வெறி, ஆயுத வெறி படங்களை எடுக்கும் சினிமாக்காரர்கள் மற்றும் அதை பார்த்து கொண்டாடும் ஒருதரப்பு மக்களின் மனநிலை மாறாவிட்டால்.. இப்படியான சம்பவங்கள் தொடராது என உத்தரவாதமில்லை.

* தற்போது 17 வயதில் இருந்து.. அடுத்து 10 வயது சிறார்கள் மனதிலும் இந்த வன்முறை எண்ணம் ஊடுருவதை தடுக்க வேண்டிய பொறுப்பு திரைத்துறைக்கும் உண்டு.

* திருந்தாத‌ கோடம்பாக்க கோமாளிகள் இனியாவது திருந்த வேண்டும்.

* சென்சார் நடைமுறைகள் இன்னும் கடுமையாக வேண்டும்." இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+