கோள் சொல்பவருக்கு தான் மதிமுகவில் முக்கியத்துவம்! வைகோவுக்கு எதிராக பொங்கும் டிஆர்ஆர் செங்குட்டுவன்!
சென்னை: கோள் சொல்பவருக்கு தான் மதிமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறியிருக்கிறார் அக்கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆ.செங்குட்டுவன்.
அன்புக்கு பணிவு காட்டுவோம், உண்மைக்கு மனமுவந்து ஊழியம் செய்வோம், பழித்ததால் பதிலுக்கு பழிப்போம் என ஆவேசம் காட்டியிருக்கிறார்.
மதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பில் பேசிய போது, ஏற்கனவே இரண்டு முறை வைகோவுக்கு அவர் எழுதிய கடிதத்தை நமது பார்வைக்கு அனுப்பி வைத்தார். 10 பக்கங்களுக்கு மேல் உள்ள அதிலிருந்து சில மட்டும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

நம்பி வந்தவர்கள்
''எதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்தமோ அதற்கும் தீர்வு காணவோ அல்லது இந்த இயக்கத்தை மாற்று சக்தியாக உருவாக்கும் எண்ணமோ உங்களிடம் இல்லை. இது இந்த இயக்கத்தில் உங்களை நிலை நிறுத்திக்கொள்ள பயன் பட்டிருந்ததே தவிர உங்களை நம்பி வந்த இயக்க தோழர்களின் வளர்ச்சிக்கு சிறிதும் பயன்படவில்லை.''

துரை தம்பி
''துரை தம்பி அவர்கள் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்யும் போது 6 வேட்பாளர்களையும் என்னுடைய வேட்பாளர்கள் என்று சொன்னார். சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு துரை தம்பி திரு.பூமிநாதன் அவர்களை உடன் அழைத்துக்கொண்டு அண்ணன் செவந்தியப்பன் அவர்களை சந்தித்தார். அப்போது துரை தம்பி அண்ணன் செவந்தியப்பனுடன் பேசும் போது என்னிடம் முன்னாலே சொல்லியிருந்தால் நான் உங்களுக்கு சீட் வாங்கி கொடுத்திருப்பேனே என்று கூறியிருக்கிறார். ''

பொதுச்செயலாளர் எதற்கு?
''இந்த இயக்கதில் முடிவு செய்பவர் தம்பி துரை தான் என்றால் பொதுச்செயலாளர் எதற்கு? உயர்நிலைக்குழு எதற்கு? அதனால் தான் உயர்நிலைக்குழுவில் இதுநாள் வரை எந்த விவாதமும் நடைபெறவில்லையா? இந்த இயக்கத்தில் கோள் சொல்பவருக்கு இருக்கும் முக்கியத்துவம் உண்மையாக உழைப்பவர்களுக்கு இல்லை என்பது வருந்ததக்கது. அதனால் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும் கட்சியில் உள்ளவர்களை விட வெளியே சென்றவர்கள் ம.தி.மு.கவில் தான் அதிகம்.''

2001 ஆம்ஆண்டு
''2001 ஆம்ஆண்டு நீங்கள் மேடையில் இருந்தபோதே மூன்று முறை அறிவாலயத்தில் இருந்து அழைப்பு வந்தது. தலைவர் செங்குட்டுவனை அறிவாலயம் வரச்சொல்கிறார். அவருக்குத் தான் சீட் என்றார்கள். நான் என் போனை வைத்திருந்த நண்பர் வீர சேகரிடம் போனை ஆப் செய்து விடு என்றேன்.''

மாற்றம் இல்லை
''அடுத்த 4 நாள் கழித்து கலைஞர் பூவிருந்தவல்லியில் பேசுகிறார் டி.ஆர்.ஆர். இருக்கும் இடம் நோக்கி வணங்கி என் உரையை துவங்குகிறேன் டி.ஆர்.ஆர். மகன் செங்குட்டுவனுக்கு சீட் கொடுப்பதாக இருந்தேன். அவர்கள் கூட்டணியில் இல்லை ஆகவே அவர் டி.ஆர்.ஆ. தம்பி மகனுக்கு சீட் சீட் கொடுக்கிறேன். இவனா வேட்பாளர் என்று கேட்காதீர்கள் டி.ஆர்.ஆர். வேட்பாளர் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.அதன் பிறகு பல முறை தி.மு.கவில் இருந்து அழைப்பு வந்தது. அதற்கு அசையாமல் இனி அரசியலில் மாற்றம் இல்லை என்று சொல்லிவிட்டேன்.''

அரசியல் வாழ்க்கை
''துரை தம்பியை வரவேற்க வரவில்லை என்பதற்காக ஆட்சிமன்ற குழு செயலாளர் மற்றும் மாவட்டச்செயலாளராக பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிற என்னை விமானநிலைய பொது வெளியில் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவனின் அரசியல் வாழ்க்கையை நான் ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவேன் என்று எந்த ம.தி.மு.க சட்டவிதிப்படி பேசினீர்கள். அதன் பின்பு நான் கலைஞரையே பார்த்தவன் என்று சொன்னீர்கள்.''

சுயமரியாதை காரன்
''நான் ஒரு சுயமரியாதை காரன். என் தந்தை பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களை பார்க்க சென்றார். அவர் வீட்டில் இருந்துக் கொண்டு இன்டர்காமில் பேச முயன்றார். அங்கிருந்த ஊழியர் இன்டர்காமில் அண்ணன் பேசுகிறார் என்று என் தந்தையிடம் சொன்னார். அப்போது என் தந்தை அவரை நேரில் பார்க்கத்தான் வந்தேன். என் வீட்டு தொலைபேசியில் அவரிடம் பேசிக்கொள்கிறேன் என்று புறப்பட்டார். அந்த ஊழியர் பொன்மன செம்மலிடம் சொல்ல அவர் அண்ணனை இருக்க சொல்லுங்கள் என்று சொல்லி உடனே என் தந்தையை நேரில் வந்து பார்த்தார்.''

மதியாதார் தலைவாசல்
''உங்கள் அன்புக்கு பணிவு காட்டுவோம். உண்மைக்கு மனமுவந்து ஊழியம் செய்வோம். என்னை பழித்ததால் தான் பல முறை நீங்கள் தொலைபேசியில் அழைத்தும் உங்களிடம் நான் பேச விரும்பவில்லை காரணம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்பது ஒளவையாரின் முதுமொழி.'' இவ்வாறு வைகோவுக்கு எதிராக தனது மனதில் தோன்றியதை கடிதம் மூலம் பதிவு செய்துள்ளார் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன். இவர் இன்று காலை மதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications