உயிருக்கு போராடும் 7 வயது சிறுமி.. உங்களின் சிறு உதவி உயிரையே காப்பாற்றும்.. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
சென்னை: திருவள்ளூரை சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த 7 வயது சிறுமி தனன்யா இதய பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது அறுவை சிகிச்சைக்கு ரூ.2.60 லட்சம் தேவையாக உள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் உதவி கோரியுள்ளனர். உங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்தால் சிறுமி தனன்யாவை காப்பாற்ற முடியும்.
திருவள்ளூரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். திருமணமானவர். இவர் தனது மனைவி, மகள் உள்ளனர். மகள் பெயர் தனன்யா (வயது 7). இவர்கள் ஏழை குடும்பம்.

சுரேஷ் குமார் தினக்கூலியாக ரூ.800க்கு வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை செய்து மாதம் ரூ.7 ஆயிரம் சம்பாதிக்கிறார். மகிழ்ச்சியா வாழ்ந்து வந்த இந்த குடும்பத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பெரிய சிக்கல் உருவானது.
சுரேஷ் குமாரின் மகள் தனன்யா சளி, இருமலால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அந்த பாதிப்பு குணமாகவில்லை. இதனால் தனன்யா கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சனையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார். இதையடுத்து தனன்யா மியாட் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவ குழுவால் நடத்தப்பட்ட இதய பரிசோதனையில் பங்கேற்றார். அங்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையின்போது தனன்யா large Atrial Septal Defect (ASD)பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மேலும் Short Postero Inferior rim பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த பிரச்சனை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த அறுவை சிகிச்சை, ஐசியூ, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மாத்திரை, மருந்துகளுக்கு என்று மொத்தம் ரூ.2.60 லட்சம் வரை செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சுரேஷ் குமாரின் குடும்பம் ஏழ்மையில் உள்ளது. இதனால் அவர்களுக்கு ரூ.2.60 லட்சம் என்பது பெரிய தொகையாக உள்ளது. இதனால் அவர்கள் தங்களின் குழந்தையை காப்பாற்ற உதவி கோரியுள்ளனர். உங்களின் சின்ன உதவி கூட 7 வயது ஏழை குழந்தை தனன்யாவின் உயிரை காக்கும். நன்கொடை வழங்க விரும்புவோர் இந்த https://www.letscontribute.in/fundraiser/help-dananya-receive-life-saving-treatment லிங்க் மூலம் வழங்கலாம்.













Click it and Unblock the Notifications