திருவள்ளூர் காமாட்சி.. "சினிமாவில் கூட பார்த்ததில்லை".. நீதிபதி நறுக்.. கூனிகுறுகிய ஹைகோர்ட் வக்கீல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இளம்பெண் கடத்திக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட வழக்கு குறித்து ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவினை பிறப்பித்துள்ளது.. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு எச்சரிக்கையையும் நீதிபதிகள் பிறப்பித்திருப்பது பரபரப்பை தந்து வருகிறது.
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் காமாட்சி என்ற இளம்பெண்.. இவரை சில ரவுடிகள் கடத்தி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதாக, வழக்கறிஞர் ஒருவர் சென்னை ஹைகோர்ட்டில் முறையீடு செய்திருந்தார்.

விசாரணை: எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க துவங்கியது.. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

mhc thiruvallur chennai hc

அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, "இளம்பெண் கொலை செய்யப்பட்டதாக வழக்கறிஞர் புகார் தந்திருந்தார்.. அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. ஆனால், அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை.. அந்த புகாரே தவறானது என்பதும் தெரியவந்துள்ளது.

நீதிபதிகள்: சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதனால் அந்தப்பெண் கொடுத்த தகவலை உண்மை என நம்பி, வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார்.. இந்த முறையீடு காரணமாக அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனையும் நிறுத்தி வைக்கப்பட்டது" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "இப்படியொரு சம்பவத்தை சினிமாவில் கூட பார்த்தது இல்லை. அந்தப்பெண் குறித்து முன்பே ஏன் கோர்ட்டில் தகவல் தெரிவிக்கவில்லை? என்று முறையீடு செய்த வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

முடித்து வைப்பு: மேலும், "இதுபோன்ற விவகாரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை செய்த நீதிபதிகள், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கையும் முடித்து வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+