Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவி உடையில் திருவள்ளுவர்.. ருத்ராட்சம்.. விபூதி.. ஆளுநர், அண்ணாமலை பதிவால் மீண்டும் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, ருத்ராட்சம், விபூதி பட்டையுடன் மத சின்ன அடையாளத்துடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.

தமிழ்நாடு முழுவதிலும் ஜனவரி 16ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. பல தலைவர்களும் திருவள்ளுவருக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தி வருகின்றனர். சனாதனத்துக்கு ஆதரவாக பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திராவிட மாடல் ஆட்சியை முன்னிறுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

Thiruvalluvar in saffron dress Rudraksam Vibhuthi BJP Annamalai Post controversy again

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். - ஆளுநர் ரவி

அந்த வகையில், தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டிருந்தார். அதில் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Thiruvalluvar in saffron dress Rudraksam Vibhuthi BJP Annamalai Post controversy again

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது.

பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம் என்று பதிவிட்டுள்ளார் அண்ணாமலை,

காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து சனாதன துறவி என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையான நிலையில்,
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ட்விட்டர் பதிவும் விவாதப்பொருளாகியுள்ளது.

திருவள்ளுவரின் உருவம் குறித்த ஆய்வுகளுக்கான முயற்சி 19-ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. 1904ஆம் ஆண்டில் வடிவேலு செட்டியார் என்பவர் 'திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்' என்ற நூலை வெளியிட்டார். அதில் ஜடை முடியுடன் தாடி மீசையுடன் மார்பு குறுக்கே யோகா பட்டை எனப்படும் துண்டை அணிந்தபடி திருவள்ளுவர் காட்சியளித்தார்

இதற்குப் பிறகு வெளியான ஆங்கில நூலின் பதிப்பிலும் திருவள்ளுவர் சிலை இடம்பெற்றிருந்தது. அதில் திருவள்ளுவர் ஒரு சைவ சமய அடியாரைப்போல காட்சி தந்திருந்தார். கரங்களிலும் நெற்றிலும் விபூதி பட்டையுடன் காட்சியளிக்கும் இவர் மரத்தடியில் அமர்ந்து இருப்பதுபோல அந்தப் படம் இடம் பெற்றிருந்தது.

பின்னர் நடந்த ஆய்வுகளின்படியும் அவர் கருத்துகளைக் கொண்டும், அவரின் பன்முகத்தன்மையை நிலைநிறுத்த 1950-களில் முதன்முதலாக திருவள்ளுவர் எந்த மதச் சின்னமும் இன்றி வரையப்பட்டார். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வழக்கமான தோற்றத்திலிருந்து மாற்றி காவி உடை தரித்தவராக தமிழ்நாடு பாஜக முயற்சி செய்துவருகிறது.

அதனடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் முதன்முதலாக காவி உடை அணிந்த திருவள்ளுர் படத்தை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. ஆனாலும் தொடர்ந்து பாஜக காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு பல அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். உலகப் பொதுமறை தந்தவர் வள்ளுவர், அவரையும் குறளையும் வைத்து அரசியல் செய்யாதீர்கள் என பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசக்கூடாது எனக் கண்டித்தனர். அனைத்துத் தரப்பு மக்களாலும் நாடு, மதம், மொழி, இனம் கடந்து திருக்குறள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று நடுநிலையாளர்கள் தெரிவித்தனர்.

திருவள்ளுவர் விவகாரத்தைக் கையிலெடுத்துள்ள இந்து அமைப்புகளின் தலைவர்கள் தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலை இருந்த பகுதிக்குச் சென்ற அவர், திடீரென தான் கொண்டுவந்த காவித்துண்டு, மாலை ஆகியவற்றை திருவள்ளுவருக்கு அணிவித்தார்.

பின்னர் ருத்ராட்ச மாலை அணிவித்து, திருநீற்றைப் பூசி கற்பூரம் ஏற்றி வள்ளுவருக்கு தீபாராதனை காட்டினார். இதனையடுத்து அர்ஜுன் சம்பத்தைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் மீண்டு காவி உடை ருத்ராட்சம் அணிந்து விபூதி பட்டை அடித்துள்ள திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது விவாதப்பொருளாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+