அவர் தெய்வப்புலவர்.. நாத்திகர் அல்ல.. எங்களுக்கு கடவுள் பக்தி உள்ளது.. மாஃபா பாண்டியராஜன் கருத்து

வள்ளுவரை இந்துமதம் என்று கூறுவது அவர் அவர்களின் விருப்பம் என்று தமிழக அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வள்ளுவரை இந்துமதம் என்று கூறுவது அவர் அவர்களின் விருப்பம் என்று தமிழக அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கட்சி தனது டிவிட்டில் திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இது தமிழகம் முழுக்க பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்

தமிழ்

அதில், பிரதமர் மோடியால் தமிழின் புகழ் உலகம் எங்கும் ஒலிக்கிறது. தமிழை கொண்டாடுவதை நாங்கள் வரவேற்கிறோம். திருக்குறளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. பிரிட்டிஷ் அரசுதான் திருவள்ளுவரை சமண துறவியுடன் ஒப்பிட்டனர்.

தவறு

தவறு

தங்க வார்ப்பில் இருந்த சிலையை அவர் திருவள்ளுவர் என்று தவறான நினைத்தார்கள். அது சமண துறவியாவோ, சைவ வைணவ துறவியாகவோ இருக்கவே வாய்ப்புள்ளது. அவர் திருவள்ளுவர் கிடையாது.

இந்து மதம்

இந்து மதம்

வள்ளுவரை இந்துமதம் என்று கூறுவது அவர் அவர்களின் விருப்பம். வள்ளுவரை யார் எப்படி வேண்டுமானாலும் வரையள. வள்ளுவர் இப்படிதான் இருக்க வேண்டும் என்று அரசாணை எதுவும் கிடையாது. அவரை இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

பக்தி

பக்தி

தமிழ் தற்போது தரணி எங்கும் ஒலிக்கிறது. இறை நம்பிக்கை உடையவர்களின் கட்சி அதிமுக. கடவுள் வாழ்த்து எழுதியவர் திருவள்ளுவர்.அவர் தெய்வப்புலவராக இருக்கவே வாய்ப்புள்ளதே தவிர நாத்திகராக இருக்க வாய்ப்பில்லை, என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+