மு படிக்கராமுவுக்கு திருவள்ளுவர் விருது.. விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருது.. தமிழக அரசு
சென்னை: 2025 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகளை பெறும் விருதாளர்களை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. இதன்படி, அய்யன் திருவள்ளுவர் விருதுக்கு மு.படிக்கராமுவுக்கும், பேரறிஞர் அண்ணா விருது எல் கணேசனுக்கும், பாரதிதாசன் விருது பொ செல்வகணபதி என்பவருக்கும் வழங்கப்பட உள்ளது.
தந்தை பெரியா விருதுக்கு விடுதலை ராஜேந்திரனும், அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு எம்பி ரவிக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்க உள்ளார்.

திருவள்ளுவர் விருது ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகளை பெறும் விருதாளர்களை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* அய்யன் திருவள்ளுவர் விருதுக்கு மு.படிக்கராமு தேர்வு.
* பேரறிஞர் அண்ணா விருதுக்கு தஞ்சை கீழையூரை சேர்ந்த எல் கணேசன் தேர்வு.
* பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு பொ செல்வகணபதி தேர்வு.
* மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலன் தேர்வு.
* தமிழ்த்தென்றல் திருவிக விருதுக்கு ஜிஆர் இரவீந்திரநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* தந்தை பெரியா விருதுக்கு விடுதலை ராஜேந்திரன் தேர்வு
* அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு எம்பி ரவிக்குமார் தேர்வு.
* முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ விசுவநாதம் விருதுக்கு பொதியவெற்பன் தேர்வு.
* முத்தமிழறிஞர் கலைஞர் விருது முத்து வாவாசிக்கு வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்க உள்ளார். விருது பெறுவோர் அனைவருக்கும் தலா ரூ 2 லட்சம் மற்றும் 1 சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications