திருவாரூர்தான் குறி.. வேகமாக பணிகளை செய்யும் திமுக.. இன்று ஸ்டாலினை சந்திக்கிறார் பூண்டி கலைவாணன்?
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று திமுக தலைவர் ஸ்டாலினை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் சந்திக்க உள்ளார்.
சென்னை: திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று திமுக தலைவர் ஸ்டாலினை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் வருகிறது.
திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு திமுக தயாராக தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததுதான் மிச்சம், திமுக வேகமாக பணிகளில் இறங்கிவிட்டது.
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

திமுக கூட்டம்
இந்த தேர்தலுக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை திமுக இந்த வாரம் முடிவு செய்யும் என்று கூறுகிறார்கள். இதற்காக தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுக உறுப்பினர்களின் விண்ணப்பங்களை திமுக தலைமை பெறுவதற்கு முடிவு எடுத்து உள்ளது. இந்த விண்ணப்ப பரிசீலனைக்கு பின் விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் செய்யப்படுவார்கள்.

தேதிகள்
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 3ம் தேதி தொடங்கும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 10. வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14.

எப்போது நடக்கும்
நாளை மறுநாள் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளதால், திமுக இப்போதே தனது வேட்பாளரை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி இன்றில் இருந்து திமுக சார்பாக போட்டியிட விரும்பும் நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜனவரி 4ம் தேதி நேர்காணல் நடத்தப்படும். அதன்பின் திமுக வேட்பாளர் ஆலோசனைக்கு பின் தேர்வு செய்யப்படுவார்.

ஏன் முக்கியம்
இந்த சந்திப்பு பல வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. பூண்டி கலைவாணன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக தேர்தலின் போது கடுமையாக பிரச்சாரம் செய்தவர். திமுகவின் திருவாரூர் அடையாளமாக இவர் திகழ்கிறார். இதனால் இவர் ஸ்டாலினுடன் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications