அவமானமாகிவிடும்.. அழகிரிக்கு போன தூது.. அசால்ட் பதில்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருவாரூர் தொகுதியில் போட்டியிட வேண்டாம்:அழகிரிக்கு போன தூது- வீடியோ

    சென்னை: திருவாரூர் தொகுதியில் மு.க.அழகிரி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரோ, போட்டியிடாமல் தவிர்க்க வேண்டும் என்று கருணாநிதியின் குடும்பத்தினர் தூதுவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கருணாநிதி மறைந்த பிறகு திமுகவில், தன்னை சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஸ்டாலினுக்கு தூதுவிட்டு பார்த்தார் அழகிரி. ஆனால் , கருணாநிதியால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட அழகிரியை, திமுகவில், சேர்த்துக் கொள்வதில்லை என்று ஸ்டாலின் உறுதியாக கூறிவிட்டாராம்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அழகிரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி மெரினா கடற்கரையில் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதிப் பேரணி நடத்தினார்.

    அமைதியானார் அழகிரி

    அமைதியானார் அழகிரி

    அந்தப் பேரணியில் அழகிரி எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லாவிட்டாலும் கூட நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இதன் பிறகும் கூட ஸ்டாலின் அழகிரியை கட்சியில் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை . இதையடுத்து, திண்டுக்கல்லில் கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தி விட்டு அமைதியாகி விட்டார் அழகிரி.

    அழகிரி திட்டம்

    அழகிரி திட்டம்

    இந்த நிலையில்தான் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், கருணாநிதியின் அரசியல் வாரிசு தான் தான், என்று கூற முடியும் என்று அழகிரி கணக்கு போடுகிறார். ஒருவேளை வெற்றி பெற முடியாவிட்டாலும் கூட, திமுக வேட்பாளருக்கு செல்லும் வாக்குகள், அழகிரி அல்லது அவரது ஆதரவு வேட்பாளரால் பிரியும். இது திமுக தோல்விக்கு வழி வகுத்து, தனது முக்கியத்துவத்தை ஸ்டாலினுக்கு உணர்த்தும், என்பதும் அவர் திட்டமாக இருக்கிறதாம்.

    தயா அழகிரி

    தயா அழகிரி

    திருவாரூர் தொகுதியில் அதிமுக மற்றும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய இரு கட்சிகளும் கடும் போட்டி கொடுக்கும் என்பதால், அழகிரி தான் போட்டியிடாமல், தனது மகன் தயா அழகிரியை வேட்பாளராக நிறுத்தலாம், என்று திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாநிதி குடும்பத்தில் சில பெண் உறுப்பினர்கள், அழகிரியை தொடர்புகொண்டு இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கும்படி கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பிடிவாதம்

    பிடிவாதம்

    கருணாநிதி பதவிவகித்த தொகுதியில் திமுக தோல்வி அடைந்தால், அது நமது குடும்பத்துக்குத்தான் அவமானம் என்று சென்டிமெண்டாக அவரிடம் பேசி பார்த்துள்ளனர். ஆனால், அவரோ இந்த வாய்ப்பை விட்டால் திமுகவுக்கு திரும்பி வருவதற்கு எனக்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. இதற்கு உங்கள் பதில் என்ன ? ஸ்டாலினை உங்களால் சம்மதிக்க வைத்து என்னை திமுகவில் மீண்டும் சேர்க்க முடியுமா? என்றெல்லாம் பதில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு எதிர்முனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அழகிரி அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+