Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அத்தனை போட்டோவையும் விட்டு விட்டு எதை எடுத்து போட்டிருக்கார் பாருங்க எச்.ராஜா!

எச்.ராஜாவுக்கு திமுகவின் டிஆர்பி ராஜா ட்விட்டரில் பதிலடி தந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச். ராஜா சும்மாவே இருக்க மாட்டார் போலிருக்கு. ஏதாவது ஒன்றை பேசிவிட்டு பல்ப் வாங்குவதே வழக்கமாக வைத்துள்ளார்.

சர்ச்சையா பேசிவிட்டு, தலைமறைவா இருந்தபோது அமைதியாக இருந்த எச்.ராஜா, கோர்ட்ல போய் மன்னிப்பு கேட்டுட்டு வந்ததிலிருந்து திரும்பவும் ஆரம்பிச்சிட்டார்.

ஒரு பக்கம் கமல், இன்னொரு பக்கம் கனிமொழி என மாறி மாறி புகார் சொல்லி வருகிறார். இதற்கு நடுவில் கேப் கிடைக்கும்போது வைகோ மாட்டி கொள்கிறார்!!

என்ன தகுதி இருக்கிறது?

என்ன தகுதி இருக்கிறது?

நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "புயல் அடிச்ச 6 மணி நேரத்துல நாங்க ஓடினோம். ஆனா கமல் 17-வது நாள் போய்வந்திருக்கிறார். இதில் மத்திய அரசையும் குற்றம் சொல்கிறார். 30 வருஷமாக தமிழ் மக்களை சினிமா மோகத்திலே வைத்திருந்த கமலுக்கு மத்திய அரசை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?" என்று கேட்டிருந்தார்.

கமல் போட்டோ பதிவு

இவ்வளவு கேட்டும் கமலின் நாகை சுற்றுப்பயணம் எச்.ராஜாவால் மறக்க முடியவில்லை போலிருக்கிறது. அதனால் தன் ட்விட்டர் பக்கத்தில் கமல் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். நாகை சென்றபோது, கமல் பஸ்சில் சென்றதிலிருந்து டீக்கடை பெஞ்ச்சில் உட்கார்ந்து டீ குடித்தது வரை அன்றைய ஒருநாள் கமலின் அசைவுகளை நாடே பார்த்துவிட்டது.

கமலும் தென்னை மரமும்

கமலும் தென்னை மரமும்

மக்களை சந்தித்து குறைகளை கேட்டதிலிருந்து பாட்டி கன்னத்தை வருடியது வரை எல்லா கமலின் போட்டோக்களுமே வைரலாயின. ஆனால் இது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கமல் தென்னை மரத்தின் மீது கால் வைத்து சுற்றி பாதிக்கப்பட்ட பகுதிகளை நின்று பார்க்கிறார்.

சூட்டிங் எடுக்க

சூட்டிங் எடுக்க

இந்த போட்டோவைதான் தன் ட்விட்டர் பக்கத்தில் எச்.ராஜா பதிவிட்டு, "இவர் அங்கு போனது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல அல்ல. படம் சூட்டிங் எடுக்க. வெட்கம்" என ட்வீட் செய்திருக்கிறார்.

காவி டிசைன்

காவி டிசைன்

ஆனால் எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா பதிலடி தந்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில், "இது தரம்தாழ்ந்த காவி டிசைன்... முட்டாள்தனமாக ஒரு சிலைக்கு ரூ.3000 கோடி செலவழிக்கிறார்கள். ஆனால், உயிரும் மூச்சுமாக இருக்கும் மக்களுக்கு எதையும் தருவதில்லை.

ட்வீட்கள் வைரல்

அத்துடன் நில்லாமல், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லும் இதயம் கொண்டவர்களைப் பார்த்து இப்படி கூச்சலிடுகிறார்கள். நீங்கள்தான் அழுக்கு. இந்த அழுக்கை மாற்றி சுழலும் காற்று அடித்துச் செல்லும்" என பதிட்டுள்ளார். இந்த இரண்டு ராஜாக்களின் ட்விட்டர் பதிவுகளுமே இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

ஆனால், திமுகவுக்கும் கமலுக்கும் கூட்டணி கிடையாது என்ற தற்போதைய நிலையில், கமலின் நாகை சுற்றுப்பயணத்தை விமர்சித்ததற்கு டிஆர்டிபி ராஜாவே பதிலடி தந்திருக்கிறார் என்பதை எச்.ராஜா புரிந்து கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+