கடின உழைப்புக்கு இதுதாங்க உதாரணம்.. ஏழை விவசாயி மகன் டூ பெரும் கோடீஸ்வரர்.. சாதித்தது எப்படி?
சென்னை: கடின உழைப்பு இருந்தால் போதும் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்று சொல்வார்கள். இதை அப்படியே நிரூபித்து இருக்கிறார் பிரபல தொழில் அதிபர் ஒருவர்.. சாதாரண ஏழைக்குடும்பத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய வேலுமணி என்பவரை பற்றி இங்கே பார்க்கலாம்.
பெரிய பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களை நிறுவிய பலரும் ஆரம்ப காலத்தில் மிகவும் எளிமையான பின்னணியில் பிறந்து உச்சத்தை தொட்டவர்கள்தான்.. விடா முயற்சி, கடின உழைப்பு மூலம் எதையும் சாத்தியப்படுத்தலாம் என்பதற்கு உன்னதமான எடுத்துக்காட்டாக பல தொழில் அதிபர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. அப்படியான ஒரு எடுத்துக்கட்டுதான் தொழில் அதிபர் வேலுமணி ஆவார்.

தைகோர் டெக்னாலஜிஸ் எனப்படும் டயக்னஸ்சிடிக்ஸ் மற்றும் ஆய்வகத்தின் நிறுவனரான வேலுமணி இன்று 1,400 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக உள்ளார். ஆனால், இவரது ஆரம்ப கால வாழ்க்கை அவ்வளவு வசதியானது இல்லை. 500 ரூபாயில் ஆரம்பித்த தனது நிறுவனம் இன்று பல கோடி மதிப்புடன் உயரும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
கூலி வேலை செய்த தாய்: எந்த இடத்தில் இருந்தாலும் பரவாயில்லை.. தொடர் முயற்சி, கடின உழைப்பு மூலம் எந்த உயரத்தை எட்ட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இவரது உழைப்பு அமைந்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். கோவையை சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் வேலுமணி. தந்தை விவசாய தொழில் ஈடுபட்டு வந்தார். இவரது தாயாரும் கூலி வேலை செய்து வந்து இருக்கிறார்.
வாரத்திற்கு ரூ.50 மட்டுமே தாயாரின் சம்பளம். உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு வேலுமணியின் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த கொடிய வறுமையிலும் வேலுமணியை கஷ்டப்பட்டு பி.காம் வரை பெற்றோர்கள் படிக்க வைத்தனர். கோவை அருகே உள்ள பாராமெடிக்கல் நிறுவனத்தில் படித்து முடிந்தவுடன் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
பிஎப் பணத்தை எடுத்து தொழில்: எனினும், 4 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டதால், வேலையின்றி தவித்துள்ளார். இதனால், வேறு வேலையை தேடி வந்துள்ளார். வெறும் 400 ரூபாய் மட்டுமே பாக்கெட்டில் இருந்துள்ளது. ஆனாலும் புதிய வாய்ப்புகளை தேடி மும்பைக்கு தனது பயணத்தை தொடங்கினார். மும்பையில் பார்க் என்ற நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றிய போது வேலுமணிக்கு ஒரு ஐடியா தோன்றியது.
ஏன் நாம் சொந்தமாக ஒரு தொழிலை தொடங்கக் கூடாது என்று எண்ணிய வேலுமணி, தனது பிஎப் பணத்தை எடுத்து வேலையை தொடங்கியுள்ளார். 1996 ஆம் ஆண்டு தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை ஒரு லட்சம் முதலீட்டுடன் வேலுமணி தொடங்கினார். ஆரம்பத்தில் இருந்தே இந்த நிறுவனம் செழித்து வளரத்தொடங்கியது. பல கிளைகளுடன் விரிந்த இந்த நிறுவனத்தின் சொத்துமதிப்பு 2021-ல் 7 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.
பலருக்கும் முன்னுதாரணமாக: வணிக உலகில் தனது சாம்ராஜ்யத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக பார்ம் ஈசி நிறுவனத்திற்கு தன்னுடைய 66 சதவீத பங்குகளை விற்பனை செய்தார். பார்க் நிறுவனத்தில் பணியாற்றிய போதே.. மேற்படிப்பையும் தொடர்ந்தார். பயோகெமிஸ்ட்ரியில் எம் எஸ்சி முடித்த வேலுமணி, தைராய்டு பிசியாலஜியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
தைகேர் நிறுவனம் மட்டும் இன்றி நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து.. தனது கடின உழைப்பு அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு மூலம் பல கோடிக்கு அதிபதியாகி வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்து இருப்பது பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications