அட.. ஹீலியம் பலூனில் பரிசுப்பெட்டிகளை பறக்க விடும் அமமுகவினர்.. உள்ளே என்ன இருக்கு தெரியுமா?
அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய பரிசுப் பெட்டி சின்னத்தை வைரலாக்க வித்தியாசமான வழிமுறைகளை பயன்படுத்தி வருகிறார்.
சென்னை: அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய பரிசுப் பெட்டி சின்னத்தை வைரலாக்க வித்தியாசமான வழிமுறைகளை பயன்படுத்தி வருகிறார்.
தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது. இந்த சின்னம் கிடைத்தது டிடிவி தினகரன் தரப்பிற்கு பெரிய மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது.
இந்த சின்னத்தை பிரபலப்படுத்தும் வேலையில் அமமுகவினர் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்.

எப்படி
அமமுகவினர் இந்த பரிசுப் பெட்டியை வைத்து வித்தியாசமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் இந்த சின்னத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஹீலியம் பலூன்களில் பரிசுப் பெட்டிகளை பறக்க விடுகிறார்கள். எடை குறைந்த பரிசுப் பெட்டிகளை செய்து அதை ஹீலியம் பலூன் மூலம் பறக்கவிட்டு விளம்பரம் செய்கிறார்கள்.

மக்களிடம்
அதேபோல் பரிசுப் பெட்டிகளை சாலையில் செல்லும் மக்கள், பேருந்தில் இருக்கும் மக்களிடம் கொண்டு அளிக்கிறார்கள். இதற்காக லாரி லாரியாக நிறைய பரிசுப் பெட்டிகளை உருவாக்கி விநியோகம் செய்து வருகிறார்கள். நிறைய அலங்காரத்துடன் வண்ணமயமாக இப்படி பரிசுப் பெட்டிகளை அவர்கள் செய்து உள்ளனர்.

என்ன இருக்கிறது
ஆனால் இந்த பரிசுப் பெட்டிகளில் எதுவுமே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். இதனுள் ஏதாவது இருக்கும் என்று மக்கள் அதை தீவிரமாக திறந்து பார்த்தால் அவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். உள்ளே எந்த விதமான பொருட்களையும் அமமுகவினர் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இப்படி
பரிசுப் பெட்டிக்குள் ஏதாவது வைத்து கொடுத்தால் அது தேர்தல் விதிமுறை மீறலாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரச்சனையில் சிக்க வேண்டாம் என்று காலியான பரிசுப் பெட்டிகளை மட்டுமே அமமுகவினர் மக்களிடம் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications