அட முதல் நாளே டிரெண்டான டார்ச் லைட்.. கொண்டாடும் மநீம தொண்டர்கள்..கிண்டலுக்கும் குறைவில்லை!
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்து இருக்கும் டார்ச் லைட் சின்னத்தை அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்து இருக்கும் டார்ச் லைட் சின்னத்தை அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.
இதை பலர் கிண்டல் செய்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை தற்போதுதான் வெளியிட்டது.
வருகின்ற லோக்சபா தேர்தலில் இந்த சின்னத்தில் கீழ்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்கள் மகிழ்ச்சி
இந்த டார்ச் லைட் சின்னம் கிடைத்ததில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் அதீத மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். நாங்கள் எதிர்ப்பார்த்த சின்னம் கிடைத்துவிட்டது என்று சந்தோச மிகுதியில் இருக்கிறார்கள். இனி இதை பிரபலப்படுத்தும் வேலையை பார்க்க வேண்டும் என்று தீவிரமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வைரலானது
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் கிடைத்த சில நிமிடத்திலேயே அது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்தியா முழுக்க பலர் இந்த சின்னம் குறித்துதான் பேசிக்கொண்டு இருந்தார்கள். இதனால் "Battery Torch" ''Torch light'' ஆகிய வார்த்தைகள் டிவிட்டரில் டிரெண்டானது.

என்ன சொல்கிறார்கள்
இந்த சின்னம் கிடைத்ததில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் எல்லோரும் ஒரே விதமான கருத்து ஒன்றை தெரிவித்து வருகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் அரசியலில் இருளை போக செய்து ஒளியை பாய்ச்சும் என்று ஒருமித்த குரலில் குறிப்பிட்டு வருகிறார்கள்.
|
கிண்டல் செய்து வருகிறார்கள்
அதே சமயம் இதை சிலர் கிண்டலும் செய்து வருகிறார்கள். தேர்தல் ஆணையம் கமல்ஹாசனுக்கு பல்பு கொடுத்துவிட்டது, இருட்டில் இருக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கு விளக்கு தேவைதான். எதிர்காலத்தில் டார்ச் லைட் அடித்து தேடும் அளவிற்கு மநீம காணாமல் போய்விடும் அதனால்தான் இந்த சின்னம் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications