தவெகவில் இது வெறும் ஆரம்பம்தான்.. விஜய் கையில் லிஸ்ட்.. இனிதான் இருக்கு கச்சேரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவில் அரசியல் பிரபலங்கள் இணைவதற்கு புஸ்சி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஏற்படுத்தி வைத்திருந்த தடைகளை உடைத்திருக்கிறார் விஜய். அதற்கு முன்னோட்டமாக, ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரை கட்சியில் இணைத்து தன்பக்கம் கவனத்தை ஈர்த்துள்ள விஜயின் கையில் இன்னும் பெரிய லிஸ்ட் இருப்பதாகவும், இதனால் வரும் நாட்களில் தவெகவில் பிற கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் சேரலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் என்ற தவெகவில் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் ஐ.டி.விங்க் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் இன்று இணைந்தனர். இருவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்புகள் என்பது வழங்கப்பட்டுள்ளது.

tvk vijay

ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவியும், சிடிஆர் நிர்மல் குமாருக்கு தவெகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 2 பேரையும் ஒரே நாளில் தவெகவில் இணைத்துள்ளதன் மூலம் விஜய் தன்பக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் கட்சியில் பிரபலமானவர்கள் யாரும் இல்லை என்ற பேச்சு இருந்தது. தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா மற்றும் சிடிஆர் நிர்மல் குமாரை தவெகவில் இணைத்துள்ளார் விஜய்.

அதுமட்டுமின்றி தவெகவில் அரசியல் பிரபலங்கள் இணைவதற்கு புஸ்சி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஏற்படுத்தி வைத்திருந்த தடைகளை உடைத்திருக்கிறார் விஜய். அதற்கு முன்னோட்டமாக, ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரின் இணைப்பை பரபரப்பாக்கி வருகிறது த.வெ.க. தலைமைக் கழகம். இதன் மூலம், த.வெ.க.வில் அரசியல் பிரபலங்கள் இணைவதற்கு தடை இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் விஜய்.

இந்த நிலையில், கடந்த காலங்களில், த.வெ.க.வில் யாரெல்லாம் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்களோ அவர்களைப் பற்றிய லிஸ்ட் வேண்டும் என்று புஸ்சி ஆன்ந்திற்கு உத்தரவிட்டுள்ளார் விஜய். அந்த பட்டியல் விஜய்யிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள அரசியல் பிரபலங்கள், அனுபவஸ்தர்களின் அரசியல் வரலாறு, அவர்களின் பின்னணி ஆகியவைகளை ஆராய்ந்து, அதில், நீண்ட அரசியல் அனுபவமும் பின்னணியும் கொண்ட பிரபலங்களை தொடர்பு கொண்டு விஜய் பேசவிருக்கிறார்.

அவர்கள் த.வெ.க.வில் இணைய வேண்டும் என்கிற தனது விருப்பத்தை வெளிப்படுத்துவார். அப்போதுதான், விஜய் மீது அரசியல் பிரபலங்களுக்கு நம்பிக்கையும் மதிப்பும் உருவாகும் என்று விஜய்யிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை ஒப்புக்கொண்டிருக்கும் விஜய், அரசியல் பிரபலங்களை தொடர்புகொண்டு பேசவிருக்கிறார். அதனை அடுத்து அவர்கள் கட்சியில் இணைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+