இது தெற்கு.. வேறு பாதையில்தான் செல்லும்.. மொத்தமாக காலியாகும் பாஜக..கருத்து கணிப்பில் திடுக் ரிசல்ட்
சென்னை: லோக்சபா தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜக படுமோசமாக தோல்வி அடையும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னணி செய்தி நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்ட மூட் ஆப் தி நேஷன் கருத்துக்கணிப்பு முடிவுகள் கவனிக்கப்பட்டு உள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணி - 335 இந்தியா கூட்டணி - 166 பிற கட்சிகள் - 42 மொத்த லோக்சபா தொகுதிகள் - 543 பெரும்பான்மைக்கு தேவையானவை - 272
கடந்த லோக்சபா தேர்தல் முடிவோடு ஒப்பிடும் போது பாஜக 18 இடங்கள் குறைவாகவும் எதிர்க்கட்சிகள் கூட்டணி 75 இடங்கள் கூடுதலாகவும் பெற வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகளின் டேட்டாக்கள் காட்டுகின்றன.
தென்னிந்தியா: அதே சமயம் தென்னிந்தியாவில் பாஜக மோசமான தோல்வியை சந்திக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்னிந்தியாவில் மொத்தமாக 5 மாநிலங்களில் 132 தொகுதிகள் உள்ளன.
இதில் இந்தியா கூட்டணி 76 இடங்களில் வெற்றிபெறும்.
பாஜக 27 இடங்களில் வெற்றிபெறும்.
மற்ற கட்சிகள் 29 இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதிலும் கர்நாடகாவில் மட்டுமே பாஜக கொஞ்சம் டீசண்ட் வெற்றியை பெறுகிறது. மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஒற்றை இலக்க எண்களை மட்டும் பெற்று பெரும் தோல்வியை நோக்கி பாஜக செல்வதாக கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
கர்நாடகா: கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி வெறும் 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானா - ஆந்திரா: ஆந்திராவில் பாஜக பூஜ்யம். ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா இடங்கள் நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 17 இடங்களில் வெற்றி பெறும். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 17 லோக்சபா தொகுதிகளில் 10 இடங்களில் காங்கிரஸ் வெல்லும்.. பாஜக 3 இடங்களிலும், கடந்தாண்டு வரை தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் 3 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு
தமிழ்நாடு: பாஜக ஜீரோ.
கேரளா: பாஜக ஜீரோ:
தமிழ்நாடு வாக்கு வங்கி: இந்தியா டுடே சர்வே: இந்தியா டுடேவின் மூட் ஆப் தி நேஷன் சர்வேவில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெல்லும். கடந்த முறை 38 இடங்களில் வென்றது. இந்த முறை.. ரவீந்திரநாத் எம்பி வென்ற இடத்தையும் சேர்த்து 39 இடங்களிலும் திமுகவே வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வாக்கு வங்கி 47 சதவிகிதம் ஆக இருக்கும். பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது. ஆனால் வாக்கு வங்கி 15 சதவிகிதம் ஆக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிமுக வாக்கு வங்கி கூறப்படவில்லை. மாறாக "others" என்று கூறி.. மொத்தமாக மற்ற கட்சிகளின் வாக்கு வங்கி 38 சதவிகிதம் என்று கூறப்பட்டு உள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications