சர்ர்ன்னு இறங்குதே.. தங்கம் வாங்க இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது.. விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராம் 72,000 ரூபாயாக உள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,670 ஆகவும், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ₹ 7,277 ஆகவும் உள்ளது (இது 999 தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது). கடந்த சில வாரங்களாக தங்கம் விலை உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது விலை சரிவது தங்கம் வாங்க சாதகமான சூழலை உருவாக்கி உள்ளது.

சென்னையில் தங்கம் விலை - செப்.12 நிலவரப்படி:

சென்னையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.72,000 ஆக உள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.68,990 கிராம் ஆகவும், கடந்த வாரம் ஆகஸ்ட் 22ஆம் தேதி 10 கிராம் ரூ.70,580 ஆகவும் இருந்தது.

gold rate silver investment

மற்ற நகரங்கள்: மதுரையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,670 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,310 ஆகவும் உள்ளது.

கோவையில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,727 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,463 ஆகவும் உள்ளது.

திருச்சியில் இன்று தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 6,473 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 7,174 ஆகவும் உள்ளது.

தங்கம் உச்சம் தொடும்: 2024 பாதியில் தங்கத்தின் விலை 80 ஆயிரத்தை தாண்டும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும்.. அடுத்த 4-5 வருடங்கள் தங்கத்தின் விலை வேகமாக உயரும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2030ல் விலை உச்சம் அடையும்: 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். CNBC Awaaz நிகழ்ச்சி உரையாடலில் பேசிய Vighnaharta Gold இன் தலைவர் மகேந்திர லூனியா, 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும் என்று கணித்துள்ளார்.

இன்று தங்கம் விலை: கடந்த ஒரு வாரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 2.10% உயர்ந்துள்ளது, கடந்த பத்து நாட்களில் தங்கம் 3.50% உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.844.6 ஆக உள்ளது. இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 20 அன்று 10 கிராமுக்கு ரூ.73,303 ஆக உள்ளது. கிராம் ஒன்றின் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.7,341 ஆக உள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,900 ஆக இருந்தது.

தங்க விலைஉயர்வு சர்வதேச அளவில் போர்கள் நடக்கின்றன. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+