குழப்பியடித்த புஸ்ஸி ஆனந்த்.. கிளப்பி விட்ட திமுகவால் விஜய்க்கு எகிறிய கிரேஸ்.. லேட்டா வரல: பிரபலம்
சென்னை: ஃபிளைட்டில் கிளம்பி திருச்சிக்கு செல்வதால், ஃபிளைட்டின் நேரமும் முன்கூட்டியே குறிக்கப்பட்ட ஒன்றாகும்.. சார்டர்ட் பிளைட் என்பதால் அதற்கான அனுமதியையும் முன்கூட்டியே விஜய் தரப்பில் வாங்கி வைத்திருக்கிறார்கள்.. அப்படியிருக்கும்போது எப்படி காலையில் 8.30 மணிக்கே நாமக்கல்லுக்கு போக முடியும்? என்று பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, உயிரை பறிகொடுத்தவர்களின் குடும்பத்தினரே விஜய் மீது குற்றம் சொல்லவில்லை.. விஜய் மீது பாசிட்டிவ்வாகவே பேசுகிறார்கள்..

நிறைய சந்தேகங்கள்
கரூர் விபத்து தொடர்பாக நிறைய கேள்விகள், நிறைய சந்தேகங்கள் மக்களுக்கே வந்துவிட்டது. இந்த இடத்தை கூட்டம் நடத்த தந்தது யார்? நெருக்கடி இடத்தை ஒதுக்கியது ஏன் என்ற பல கேள்விகள் மக்களிடமே எழுந்துவிட்டது.
மேலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கண்ணீர், மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி எப்படி அவ்வளவு சீக்கிரம் போனார்? மருத்துவ அணி என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆம்புலன்ஸ், கூட்டத்தில் திடீர் கரண்ட் கட், போன்ற விஷயங்கள் எல்லாமே மக்களுக்குள் கேள்விகளாய் எழுந்து நின்றன. அதனால்தான் விஜய் மீது எந்த கோபமும் திரும்பவில்லை.
விஜய்க்கு கூடியிருக்கும் ஆதரவு
நெருக்கடியான இடத்தை ஒதுக்கி, போதுமான பாதுகாப்பையும் அரசு வழங்காமல், விஜய்யை சிக்கலுக்கு ஆளாக்கிவிட்டார்களே என்பது போன்ற எண்ணம் மக்களுக்குள் வந்துவிட்டது. அவர்கள் கேட்ட இடத்தை தான் ஒதுக்கினோம் என்று அரசு தரப்பிலும், நாங்கள் கேட்ட இடத்தை தந்திருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்காதே என்று தவெக தரப்பும் மாறி மாறி சொல்வதால், உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
மக்களிடம் விஜய்க்கான செல்வாக்கு குறையவில்லை, மாறாக, செல்வாக்கு கூடியிருக்கிறது. இதற்கு காரணம், 'அரசியலுக்கு வரும்போதே ஒரு நடிகரை இப்படியா செய்வது? பழிபாவம் எல்லாம் ஒருத்தர் மீதே போடுகிறார்களே?' என்றெல்லாம் பாமர மக்களும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
கரூர், நாமக்கல் நேரம்
நிகழ்ச்சிக்கு வேண்டும் என்றே யாரும் தாமதமாக வர மாட்டார்கள்.. விஜய்யின் அன்றைய சுற்றுப்பயண பிளானே, கரூருக்கும், நாமக்கல்லுக்கும் போவதுதான்.. தமிழ்நாடு தழுவிய சுற்றுப்பயணம் அது கிடையாது.. 2 ஊருக்கு மட்டுமே சுற்றுப்பயணம் என்பதால் வீட்டிலிருந்து 8.30 மணிக்கு கிளம்பினார்.. 8.30 மணிக்கே நாமக்கல் கூட்டத்துக்கு வந்துவிடுவார் என்று யார் சொன்னது?
கரூருக்கு மதியம் 3.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை விஜய் வருவதற்கான அனுமதியை தந்ததே காவல்துறைதான். பிறகு எப்படி காலையிலேயே கரூர் வந்துடுவார்? போலீஸ் ஒதுக்கிய நேரத்தில்தான் கரூர் வந்துள்ளார்..
சிக்கல் என்னவென்றால், கரூரிலுள்ள ஆர்வ கோளாறுகள், விஜய் வருவதற்கான நேரத்தை முன்கூட்டியே அறிவித்து, அங்கே மக்களை திரட்டிவிட்டார்கள்.. மற்றபடி, விஜய் 7 மணி நேரம் தாமதமாக வரவில்லை..
விஜய் செய்த தவறு
விஜய் செய்த தவறு என்ன தெரியுமா? கேரவனில் கரூர் நோக்கி வந்து கொண்டிருப்பதை எல்லா சேனல்களும் நேரலையில் காட்ட துவங்கிவிட்டார்கள்.. இந்த தகவல் எப்படியும் விஜய்க்கும் எட்டியிருக்கும்.. கரூர் செல்ல எப்படியும் 6 மணிக்கு மேல் ஆகிவிடும், அதுவரை மக்கள் காத்திருப்பார்களே என்பதை உணர்ந்து, உடனடியாக லோக்கல் நிர்வாகியை அழைத்து விஜய் உண்மையை சொல்லியிருக்க வேண்டும்.
"கரூருக்கு வந்து சேர்வதற்கு எப்படியும் மாலை 6 மணி ஆகும், அல்லது 7 மணி ஆகும் என்பதை கரூரில் காத்து கொண்டிருக்கும் மக்களிடம் அறிவித்துவிடுங்கள்" என்று விஜய் சொல்லியிருக்க வேண்டும். ஒருவேளை விஜய் அப்படி அலர்ட் செய்தாரா? அல்லது அலர்ட் செய்தும் நிர்வாகிகள் கரூர் மக்களிடம் அறிவிக்கவில்லையா? என்பது தெரியவில்லை.
சார்டர்ட் ஃபிளைட்
எனவே 7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்தார் என்று சொன்னதே திமுக தரப்பில்தான். அதில் உண்மையும் கிடையாது.. அதேபோல நாமக்கல்லுக்கு 8.30 மணிக்கு வருவார் என்று சொன்னதும் திமுக தரப்பில் கிளப்பி விட்டதுதான்..
காரணம், ஃபிளைட்டில் கிளம்பி செல்வதால், ஃபிளைட்டின் நேரமும் முன்கூட்டியே குறிக்கப்பட்ட ஒன்றாகும்.. சார்டர்ட் பிளைட் என்பதால் அதற்கான அனுமதியையும் முன்கூட்டியே விஜய் தரப்பில் வாங்கி வைத்திருக்கிறார்கள்.. அப்படியிருக்கும்போது எப்படி காலையில் 8.30 மணிக்கே நாமக்கல்லுக்கு போக முடியும்?
புஸ்ஸி ஆனந்த்
சிக்கல் என்னவென்றால், மதியம் 12 மணி அல்லது 1 மணிக்குள் விஜய் நாமக்கல்லுக்கு வந்துவிடுவார் என்று புஸ்ஸி ஆனந்த் முன்கூட்டியே சொல்லியதுதான் சிக்கலாகிவிட்டது. கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், விஜய் வரும் சரியான நேரத்தை கரூர் மக்களிடமே தெளிவுபடுத்தியிருக்கலாம்..
சுருக்கமாக சொல்லப்போனால் தவெகவின் அனுபவமில்லாத நிர்வாகிகளால் இந்த மாபெரும் தவறு நிகழ்ந்துள்ளது. புஸ்ஸி ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர், ஆதவ் அர்ஜூனா இவர்களில் யாருடைய தவறாக அது இருக்கலாமே தவிர, 41 உயிர்கள் போனதற்கும் ஒட்டுமொத்த காரணமே விஜய்தான் என்று சொல்வது ஏற்புடையதல்ல" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications