மோகன்லால் பதவி விலக காரணம் இதுதான்! நயன், த்ரிஷா மவுனம் ஏன்? விசித்ரா விளக்கம்!
சென்னை: ஜூனியர் நடிகைகள் முன்வைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி பெரிய ஹீரோயின்கள் ஏன் மவுனமாக இருக்கிறார்கள்? என்பது பற்றியும் நடிகர் மோகன்லால் மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் உருவானது என்பது பற்றியும் நடிகை விசித்ரா சில விளக்கங்களை அளித்துள்ளார்.
நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள பாலியல் புகார்கள் பற்றிய விவாதம் மலையாள சினிமாவை கதிகலங்க வைத்துள்ளது. இதன் எதிரொலியாகக் கடந்த வாரம் 'அம்மா' சங்கத் தலைவர் பதவியிலிருந்து மோகன்லால் விலகிக் கொள்வதாக அறிவித்தார். அவருடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்தனர். இந்த கமிட்டியின் அறிக்கை பற்றி கடந்த சில நாட்களாக மவுனம் காத்து வந்த மம்மூட்டி தாமதமாகத் தனது கருத்தை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மலையாள நடிகை சார்மிளா தனக்கு நடந்த சில சம்பவங்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி இருந்தார். இதனிடையே நிவின் பாலிக்கு எதிராக ஒரு பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தது பெரிய சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

இந்நிலையில் நடிகர் மோகன்லால் நடிகர் சங்க பொறுப்பிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாக நடிகை விசித்ரா இப்போது பதிலளித்துள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "இந்த ஹேமா கமிட்டி என்பது பாலியல் விவகாரத்தை மட்டுமே பிரதானமாக வைத்து தயாரிக்கப்படவில்லை. பலரும் அதை மட்டுமே முக்கியமாக எடுத்துப் பேசி வருகிறார்கள். திரையுலகில் உள்ள பெண்களின் ஏற்ற தாழ்வுகள், சம்பளம் பிரச்சினைகள், சுகாதாரம், பாதுகாப்பு எனப் பல விசயங்கள் குறித்து அலசி ஆராய்ந்து அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளது. இதில் பாலியல் ரீதியான பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த வாக்குமூலமும் பதிவாகி உள்ளது.
அதில் வாக்குமூலம் அளிக்கும் போதே பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் மறைக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் தான் பலரும் தங்களின் புகார்களைக் கொடுத்து இருந்தார்கள். ஆனால், அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட உடன், பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் வெளியில் ஊடகங்களில் பேசத் தொடங்கிவிட்டனர். எனவே கவனம் முழுக்க அந்தப் பக்கம் இப்போது திரும்பிவிட்டது.
மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் பொறுப்பிலிருந்தவர்கள் பல ஆண்டுகளாக மிக நெருக்கமாகப் பழகியவர்கள். அவர்களுக்குள் ஒரு நட்பு இருக்கும். ஒருவர் மீது குற்றச்சாட்டு எழும்போது எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் சங்க பொறுப்பில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரையும் காப்பாற்ற முயற்சிக்கக்கூடாது. ஒருவரின் புகாரை மறைக்கவும் கூடாது. நடுநிலைமை என்பது முக்கியம். அப்படிப் பார்த்தால் மோகன்லால் சீனியர் நடிகர். அவரைப் பலருக்கும் தெரியும். அதை வைத்து யாராவது இந்த விசயத்தில் அவரிடம் உதவி கேட்கலாம். அவர் யாரையும் காப்பாற்ற முடியாது. ஒரு தர்மசங்கடமான நிலை உருவாகலாம். அதை உணர்ந்துதான் மோகன்லால் பதவி விலகி இருக்கிறார்.
இதில் முக்கியமாக விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். சினிமாவில் உள்ள எல்லா பெரிய ஹீரோயின்ஸ் அனைவருக்குமே பாலியல் தொந்தரவுகள் வருவதில்லை. ஜூனியர் ஆர்டிஸ்ட் போன்றவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். விஷால் சொல்வதைப் போல சினிமாவில் நடிக்க வரும் புதுமுக நடிகைகள் எது உப்புமா கம்பெனி? எது நல்ல கம்பெனி என்பதை உடனே கண்டுபிடித்துவிட முடியாது. அவர்கள் துறைக்குள் புதியதாக வரும்போது வாய்ப்பு வருவதைப் பற்றித்தான் யோசிப்பார்கள். உள்ளே போய் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் அனுபவம் கிடைக்கும். உப்புமா கம்பெனி பற்றி எல்லாம் தெரியவரும். ஆகவே, எல்லோரும் விழிப்புணர்வுடன் தான் நடிக்க வருகிறார்கள் என எதிர்பார்க்க முடியாது" என்று பதிலளித்துள்ளார்.
இந்தப் பாலியல் விவகாரம் பற்றி பெரிய நடிகைகள் ஏன் வாய் திறக்காமல் மவுனமாக உள்ளனர்? அவர்களின் ஆதரவு கிடைக்காததற்கு என்ன காரணம் என்பது பற்றி பேசிய விசித்ரா, "இதனால் ஒரு தீர்வு வரப்போவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். சில நாட்கள் இதைப் பற்றி பேசுவார்கள். அதன்பின் அமைதியாகிவிடுவார்கள். ஆகவே பேசி ஒரு மாற்றமும் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்று அவர்கள் நினைக்கலாம். அப்படி நினைப்பது சரிதான்.
மேலும் பெரிய நடிகைகள் பிசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் பிரச்சினை இல்லை. அப்படி இருக்கும் போது இதைப் பேசப் போக அது ஏதேனும் சர்ச்சையை உருவாக்கலாம். ஒட்டுமொத்த கவனமும் அந்தப் பக்கம் போகலாம். அதனால் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி மறுப்பு சொல்ல வேண்டி வரும். அது வளர்ந்து கொண்டே கூடப் போகலாம். அது நடிப்பதற்கு இடைஞ்சலை ஏற்படுத்தும். இதை எல்லாம் உணர்ந்துதான் தவிர்க்கிறார்கள். அதைப் புரிந்துகொள்ளக் கூடியதுதான்" என்கிறார் விசித்ரா.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications