விஜயை ஸ்டாலின் சந்தித்தது ஏன் தெரியுமா? இதுதான் பின்னணி.. ஜெயக்குமார் சொன்ன திடுக் காரணம்!
நடிகர் விஜய் திமுகவில் சேர நினைத்தால் சேரட்டும் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் விஜயை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தது ஏன் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த மு.க.செல்வியின் பேத்தியான ஓவியாவின் நிச்சயதார்த்த விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டார்.
இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் , விஜயும் சந்தித்துக்கொண்டார்கள். அப்போது, நடிகர் விஜயை திமுக தலைவர் ஸ்டாலின் கைகுலுக்கி வரவேற்றார்.

என்ன விஜய்
நடிகர் விஜய் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையிலான சந்திப்பு இணையம் முழுக்க வைரலானது. நடிகர் ரஜினி அதிமுகவிற்கு நெருக்கமாக இருப்பதால் திமுக விஜயை இழுக்க பார்க்கிறதா என்று கேள்விகள் எழுந்தது. அவர் திமுகவில் சேர்வாரா என்று கேள்வி எழுந்தது.

என்ன கருத்து
விஜய் ரசிகர்கள் இது தொடர்பாக இணையத்தில் நிறைய டிவிட் செய்து வந்தனர். அதேபோல் திமுக தொண்டர்களும் விஜய் - ஸ்டாலின் சந்திப்பு குறித்து டிவிட் செய்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய் திமுக சந்திப்பு குறித்து தற்போது அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

திமுக
அதில், நடிகர் விஜய் திமுகவில் தாராளமாக சேர்ந்து கொள்ளட்டும். திமுக யாரை சேர்க்க நினைத்தாலும் சேர்க்கட்டும். அதிமுகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்து உள்ளது. திமுகவின் வாக்கு வங்கி தொடர்ந்து குறைந்துள்ளது.

ஜெயக்குமார் எப்படி
இதனால் இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். திமுக நடிகர் விஜயை கட்சிக்குள் சேர்க்க பார்க்கிறது. திமுக யாரை போய் பார்க்க வேண்டுமோ பார்க்கட்டும். ரஷ்யா, சீனா அதிபர்களை கூட திமுக போய் சந்திக்கட்டும், அவர்கள் யாரை கட்சிக்குள் சேர்த்தாலும் எங்களுக்கு கவலை கிடையாது, என்று ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்!











Click it and Unblock the Notifications